வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2016-ல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாகாணங்களில் ஜெயிச்ச டிரம்ப்.. 2020-ல் வீழ்வாராம்.. பரபர சர்வே

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாகாணங்களில் இந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற மாட்டார் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

ரஸ்ட் பெல்ட் என்று அழைக்கப்படும் மாகாணங்களான பென்சில்வானியா, ஓஹியோ, மிக்சிகன், இண்டியானா, இல்லினாய்ஸ், விஸ்கான்சின் ஆகியவற்றில் டிரம்ப்புக்கு பெரும் தோல்வி கிடைக்குமாம். இங்கு 1970 மற்றும் 1980 களில் ஏற்பட்ட வேலையின்மை, பெருமளவில் புலம்பெயர்ந்ததால் குறைந்த மக்கள்தொகை, வாக்களிக்க முன்வராதது, தொழில் மற்றும் பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த சரிவு ஆகியவை ஏற்பட்டதால் இந்த மாகாணங்கள் ரஸ்ட் பெல்ட் என்று அழைக்கப்படுகின்றன.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஏற்கெனவே அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராக அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தை செய்து வருகிறார்.

விடுதலைக்கு சசிகலா ஆயத்தம்.. அபராதம் செலுத்த வக்கீலுக்கு அதிரடி கடிதம்! தமிழக மக்கள் பற்றி உருக்கம்விடுதலைக்கு சசிகலா ஆயத்தம்.. அபராதம் செலுத்த வக்கீலுக்கு அதிரடி கடிதம்! தமிழக மக்கள் பற்றி உருக்கம்

சாதகம்

சாதகம்

அது போல் இவரை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடனும் கடுமையாக போராடி வருகிறார். கருத்து கணிப்புகளும் ஜோபிடனுக்கும் சாதகமாகவே உள்ளன. இந்த நிலையில் ரஸ்ட் பெல்ட் நகரங்களில் ஒரு கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது. இந்த நகரங்களில் கடந்த 2016-இல் டிரம்ப் வெற்றி பெற்றார்.

நகரங்கள்

நகரங்கள்

பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்த நகரங்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதாக கூறி வாக்கு சேகரித்து வெற்றி பெற்ற டிரம்ப் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது அந்த நகர மக்களின் குற்றச்சாட்டு ஆகும். அது மட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பை டிரம்ப் சரியாக கையாளவில்லை என்பதும் பெரும் புகாராகும்.

முதலிடத்தில் அமெரிக்கா

முதலிடத்தில் அமெரிக்கா

உலகிலேயே கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அது போல் 2.19 லட்சம் மரணங்களுடன் கொரோனா பலி எண்ணிக்கையிலும் அந்த நாடு முதலிடத்தில் உள்ளது. இதுகுறித்து ஓஹியோவை சேர்ந்த தன்யா வோஜியாக் கூறுகையில் டிரம்ப் கொரோனாவை சரியாக கையாளவில்லை.

கொரோனாவால் இழப்பு

கொரோனாவால் இழப்பு

ஏப்ரல் மாதத்தில் எனது நண்பர் ஒருவரை நான் கொரோனாவால் இழந்துவிட்டேன். அது போல் டிரம்ப் மாஸ்க் பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கவில்லை. கொரோனா பாதிப்பிலிருந்து அவர் மீண்டு வந்த பிறகு அதன் தீவிரம் குறித்து அவர் அறிந்திருக்காமல் செயல்படுகிறார். 4 ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு வாக்களித்தமைக்கு வருந்துகிறேன். அவர் அதிபரே இல்லை. இந்த முறை எனது வாக்கு ஜோ பிடனுக்குத்தான் என்றார்.

அச்சம்

அச்சம்

பென்சில்வானியாவை சேர்ந்த லியோ பங்கியார்னோ கூறுகையில் நான் தற்போது ஜோ பிடனுக்குத்தான் வாக்களிக்க முடிவு செய்துள்ளேன். ஏப்ரல் மாதத்தில் எங்கள் நகரில் கொரோனா உச்சத்தில் இருந்தது. இதனால் ஜூன் மாதம் பார் மற்றும் ஹோட்டல்களுக்கான தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் பலர் வருவதற்கு அச்சமடைந்தனர். காரணம் கொரோனாதான். அதை டிரம்ப் சரியாக கையாளவில்லை. இதனால் பொருளாதாரமும் சரிந்துள்ளது.

அதிபர் டிரம்ப் அல்ல

அதிபர் டிரம்ப் அல்ல

கொரோனா போன்ற தொற்று நோய் காலத்திலும் சிறிய தொழில்கள் எப்படி தாக்குபிடிப்பது என்பது குறித்து புரிதல் கொண்டவர்தான் அதிபராக வர வேண்டும். அது டிரம்ப் அல்ல என்றார். அது போல் பென்சில்வானியா, ஓஹியோ, மிக்சிகன், விஸ்கான்சின் ஆகிய நகரங்களில் உள்ள வாக்காளர்களும் ஜோ பிடன்தான் திறமையான வேட்பாளர். அவரால்தான் கொரோனா வைரஸை எதிர்கொள்ள முடியும் என கருதுகிறார்கள்.

English summary
Donald Trump won these rust belt counties which he already won in 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X