ஒரே நாளில் பிறப்பு, பிரசவம்..! இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த இரட்டை சகோதரிகள்! எடை கூட ஒரே மாதிரியா?
வாஷிங்டன் : அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் கருவுற்று ஒரே நேரத்தில் பிரசவித்து ஒரே மாதிரி இரு ஆண் குழந்தைகளை அதுவும் ஒரே மாதிரி எடையில் பிரசவித்த சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை குழந்தைகள் என்றாலே ஒரு வீட்டில் இரட்டை மகிழ்ச்சிதான். அதுவும் அவர்களது வாழ்க்கையில் இத்தனை முக்கியமான நிகழ்வுகள் ஒன்றாக நடந்தால், அதைப் பற்றி கேட்கவே வேண்டாம்..
ஒரே மாதிரியான உருவம், ஒரே மாதிரியான உடை, நடை, பாவானை என இரட்டைக் குழந்தைகளைக் காணும் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்குவது வழக்கம் தான். சிலருக்கு உருவம் மட்டுமல்லாது வாழ்க்கையில் சில முக்கிய அமைப்புகளும் ஒரே மாதிரி இருப்பது உலக அதிசயம் என்றே சொல்லலாம்.

இரட்டை சகோதரிகள்
அந்த வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் கருவுற்று ஒரே நேரத்தில் பிரசவித்து ஒரே மாதிரி இரட்டை ஆண் குழநதைகளை அதுவும் ஒரே மாதிரி எடையில் பிரசவித்த சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜில் ஜஸ்டினியானி மற்றும் எரின் செப்லக் ஆகிய இரட்டை சகோதரிகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் சகோதரிகள்.

ஒரே நேரத்தில் பிரசவம்
இருவரும் பார்ப்பதற்கு மட்டுமல்ல பள்ளி, கல்லூரி, நண்பர்கள் வட்டம் என ஒன்றாகவே வளர்ந்தனர். இந்தநிலையில் இருவரும் வளர்ந்து திருமண வயதை எட்டிய நிலையில், மகள்களின் விருப்பப்படி, மாப்பிள்ளை பார்த்து இருவருக்கும் ஒரே நாளில் ஒரே மேடையில் திருமணத்தை நடத்தினர் பெற்றோர். கடந்த வருடம் இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்தனர். கர்ப்பமாக இருந்த இருவரும் ஒரே மருத்துவமனையிலேயே குழந்தைகளை பெற்று கொள்ள விரும்பினர்.

இரு ஆண் குழந்தைகள்
கருவுற்ற இவர்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் பிரவச வலி ஏற்பட்டதால் கலிபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் இரட்டை சகோதரிகள் இருவருக்கும் ஒரே சமயத்தில் மருத்துவர்களால் பிரசவம் பார்க்கப்பட்டது. இந்த பிரசவத்தில் இவர்கள் இருவருக்கும் அழகான இரு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

ஒரே மாதிரி எடை
சகோதரிகள் இருவரும் ஒரே நேரத்தில் பிறந்தது மட்டுமல்லாமல், ஒரே நேரத்தில் திருமணம், ஒரே நேரத்தில் பிரசவம், அதுவும் ஒரே மாதிரி ஆண் குழந்தைகள் என அனைத்தும் ஆச்சர்யம் நிறைந்ததாக உள்ளது. இதைவிட பெரிய ஆச்சர்யம் என்ன தெரியுமா? அவர்களுக்கு பிறந்த இரு ஆண் குழந்தைகளும் 3 கிலோ, 175 கிராம் என எடை கூட சமமாக உள்ளதைக் கண்டு மருத்துவர்களும் ஆச்சரியத்தில் வியந்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications