டிரம்ப் சொல்வது பொய்! அமெரிக்க தேர்தலில் பிடன்தான் வெற்றி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ட்விட்டர்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம். அத்துடன் டிரம்ப் வெளியிட்ட ட்விட்டை பொய் என்றும் கூறியுள்ளது.

ட்விட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் போலி செய்திகளையும் தவறான தகவல்களையும் களைய பெரும் பெரும் முயற்சிகள் செய்து வருகின்றன. குறிப்பாக தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஜோ பிடனுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கான களததை அமைக்கும் விவகாரத்தில் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன,

Twitter is now declaring Biden as election winner - on Trumps own tweets about fraud

ட்ரம்ப் நிறுவனம் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.. அண்மை காலமாக டொனால்டு டிரம்ப் வெளியிட்ட ட்வீட் பதிவுகளில், அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்ததாக புகார் கூறி வருகிறார். ஆனால் இதற்கான எந்த ஆதாரத்தையும் அளிக்காமல், தேர்தல் முடிவுகளை மோசடி என்றே சொல்லி வருகிறார்.

இதற்கு கடிவாளம் போட்டுள்ளது ட்விட்டர் நிறுவனம். முன்பு டிரம்ப் வெளியிட்ட மெயில் இன் வாக்குகள் குறித்த ட்வீட்டை சர்ச்சைகுரிய பதிவு என்று அடையாளப்படுத்தி அசிங்கப்படுத்தியது.

Twitter is now declaring Biden as election winner - on Trumps own tweets about fraud

இந்த முறை தேர்தல் மோசடி குறித்து டிரம்ப் வெளியிட்ட ட்வீட்டில் அதற்குமேலே சென்று அவரை கடுப்பேற்றி உள்ளது. .எப்படி என்றால், புதிய லேபிளை டிரம்பின் ட்விட்டிற்கு குறிப்பிட்டள்ளது. அந்த லேபிளில்- "அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியாளராக ஜோ பிடனை தேர்தல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக சான்றளித்துள்ளனர்." என்று கூறியுள்ளது. இதன் மூலம் பிடனின் வெற்றியை அங்கீகரித்துள்ள ட்விட்டர், டிரம்பின் ட்விட்டை பொய் என்று அறிவித்துள்ளது.

பேஸ்புக் கூட, பதிவு பொய்யானது என்றால் அதை லேபிளில் இப்போது குறிப்பிடுகிறது. அத்துடன் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து பொய்யான தகவல்கள் பரவுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளையும் பேஸ்புக் எடுத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+