வான்வெளியை முடக்கிய டிரம்ப் அரசு! மெக்சிகோ டிரோன்களால் அதிரடி.. அமெரிக்காவில் இரவோடு இரவாக பரபரப்பு
வாஷிங்டன்: மெக்சிகோ போதைப் பொருள் கும்பலின் டிரோன்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக அமெரிக்கா பரபர அறிவிப்பை வெளியிட்டது. மேலும், இதனால் மெக்சிகோ எல்லையில் அமைந்துள்ள எல் பாசோ சர்வதேச விமான நிலையத்தின் வான்வெளியை 10 நாட்களுக்கு மூடுவதாகவும் அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு, அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. டிரம்ப்பை பொறுத்தவரை அவர் மெக்சிகோ எல்லை விவகாரத்தில் எப்போதும் கடுமையான நடவடிக்கைகளையே எடுப்பார்.

மெக்சிகோ எல்லை
மெக்சிகோ எல்லை வழியாகவே அமெரிக்காவில் போதைப்பொருள் வருகிறது.. மேலும், சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவோரும் மெக்சிகோவையே அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பது அவரது குற்றச்சாட்டு. இதையெல்லாம் மெக்சிகோ தடுக்கத் தவறுவதாகக் குற்றஞ்சாட்டிக் கூடுதல் வரிகளையும் கூட கடந்தாண்டு டிரம்ப் அறிவித்து இருந்தார்.
தற்காலிக மூடல்
இதற்கிடையே மெக்சிகோ போதைப் பொருள் கும்பலுக்குச் சொந்தமான டிரோன் ஒன்று அமெரிக்காவில் நுழைந்ததாகச் சொல்லப்பட்டது. இதையடுத்து அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள எல் பாசோ சர்வதேச விமான நிலையத்தின் வான்வெளியை 10 நாட்களுக்கு மூடுவதாக அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அறிவித்தது.
மீண்டும் திறப்பு
அமெரிக்காவில் மாகாணங்களுக்கு இடையேயான பயணங்களில் விமானப் போக்குவரத்து மிக முக்கியமானதாக இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு பரபரப்பைக் கிளப்பியது. இதனால் எங்கு டெக்சாஸ் சர்வதேச விமான நிலையத்தை அடுத்த 10 நாட்களுக்குப் பயன்படுத்தவே முடியாதோ என்று மக்கள் அஞ்சினர். இதற்கிடையே தடை அறிவிப்பு வந்த சில மணி நேரத்திலேயே மற்றொரு அறிவிப்பும் வந்தது. அதில் ஏர் ஸ்பேஸ் மீண்டும் திறக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஏர் ஸ்பேஸ் முடக்கம் தொடர்ந்து இருந்தால் விமான நிலையத்திற்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானச் சேவைகளும் முழுவதும் நிறுத்தப்பட்டிருக்கும். நல்வாய்ப்பாக நிலைமை அந்தளவுக்கு மோசமடையவில்லை. இது தொடர்பாக ஏவியேஷன் துறை தனது சமூக வலைத்தளத்தில், "எல் பாசோ வான்வெளிக்கான தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்துக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அனைத்து விமானச் சேவைகளும் வழக்கம் போல் இயங்கும்" எனத் தெரிவித்தது.
என்ன நடந்தது
அதேபோல அமெரிக்கப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷான் டஃபி தனது ட்விட்டரில், "ட்ரோன் ஊடுருவலைச் சமாளிக்க விரைந்து செயல்பட்டோம். அச்சுறுத்தல் அகற்றப்பட்டுவிட்டது. இனி இப்பகுதியில் எந்த ஆபத்தும் இல்லை. விமானச் சேவை தொடங்கும்" என்றார்.. எனினும், எத்தனை ட்ரோன்களின் ஊடுருவின. அவை எப்படி அழிக்கப்பட்டது என்பது குறித்து எந்தவொரு தகவல்களையும் அவர் பகிரவில்லை.
ஏன் முக்கியம்
சுமார் 7 லட்சம் மக்கள் தொகை கொண்ட எல் பாசோ, மெக்சிகோவின் சியுடாட் ஜுவாரெஸ் நகர எல்லையில் அமைந்துள்ள முக்கிய வர்த்தக மையமாகும். விமான நிலையம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, வரும் பிப்ரவரி 20 வரை அனைத்து வகையான விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேநேரம் பல்வேறு தரப்பில் இருந்தும் தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்தே தடை அறிவிப்பு நீக்கப்பட்டது.
இந்த விமான நிலையம் தான் மேற்கு டெக்சாஸ், தெற்கு நியூ மெக்சிகோ, வடக்கு மெக்சிகோவுக்கான நுழைவாயிலாகச் செயல்படுகிறது. சவுத்வெஸ்ட், யுனைடெட், அமெரிக்கன், டெல்டா போன்ற முன்னணி விமான நிறுவனங்கள் இங்குச் சேவைகளை இயக்குகின்றன. மேலும், எல் பாசோ விமான நிலையத்திலிருந்து சுமார் 24 கி.மீ வடமேற்கில் உள்ள சாண்டா தெரேசா, நியூ மெக்சிகோ பகுதியிலும் இதேபோன்ற தற்காலிக விமானப் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications