இடியாய் இடித்த சீனா.. இறங்கி வந்த டிரம்ப்! முக்கிய பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல்! அமெரிக்கா தப்புமா?
வாஷிங்டன்: சீனா மீது வரி மேல் வரியை போட்டு மாஸ் காட்டியிருந்த அமெரிக்கா, இப்போது தீர்வே காணமுடியாத சிக்கலில் சிக்கிக்கொண்டிருக்கிறது. இதற்கு சீனா எடுத்த சில அதிரடி முடிவுகள்தான் காரணம். இந்த விஷயத்தில் தற்போது அமைதி பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் இறங்கி வந்திருக்கிறார். திங்கட்கிழமை இரு தரப்பும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது.
இது குறித்து டிரம்ப் கூறுகையில், "நிதி செயலாளர் ஸ்காட் பெஸ்ஸன்ட், வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லட்னிக் மற்றும் வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோர் அமெரிக்கா சார்பில் சீன அதிகாரிகளுடன் லண்டனில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்" என்று கூறியுள்ளார். ஆனால் சீனா தரப்பிலிருந்து யார் யார் பங்கேற்பார்கள் என்பது பற்றி இன்னும் தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை.

டிரம்பின் ஆட்டம்
கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி சீனா மிக முக்கியமான முடிவை எடுத்திருந்தது. இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று கோரிதான் அமெரிக்கா இப்போது பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறது. அரிய கனிம வளங்கள் மற்றும் காந்தங்களை எந்த நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதில்லை என்பதுதான் சீனா எடுத்திருந்த முடிவு. இந்த முடிவுக்கு காரணம் அமெரிக்காதான். சீனா மோசமான நாடு, அவர்கள் அமெரிக்காவை ஆக்கிரமிக்க நினைக்கிறார்கள், அவர்கள் ஏலியன்கள் என்றெல்லாம் சொல்லி, சீனர்களுக்கும், சீன பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை போட்டிருந்தார் டிரம்ப்.
சீனாவுக்கு கட்டம்
ஓவர் கட்டுப்பாடுகளால் 'ஹுவாய்' போன்ற சீன தயாரிப்புகள் அமெரிக்காவில் போனியாகாமல் போனது. இருப்பினும் டிமான்ட் அதிகமாக இருந்ததால், அமெரிக்கர்களால் சீன பொருட்களை தவிர்க்க முடியவில்லை. இதை பார்த்த டிரம்ப், ஒரேயடியாக சீனாவின் இணைய சேவை பொருட்களுக்கு முற்றிலுமாக தடையை போட்டார். ஆனாலும், மற்ற துறை சார்ந்த பொருட்களின் விற்பனை நன்றாக கல்லா கட்டியது. அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் சீன பொருட்கள் செம்மையாக விற்பனையாகின.
டிரம்ப்பின் வரி நடவடிக்கை
இப்படியே போனால் நம் மேல் இருக்கும் பயம் விட்டு போய்விடும் என்று பயந்த டிரம்ப், உலக நாடுகளுக்கு வரி போட்டார். அதாவது அமெரிக்கா பொருட்களுக்கு உலக நாடுகள் எவ்வளவு வரியை போடுகிறதோ, அதே அளவுக்கு அமெரிக்காவும் போடும் என்று அறிவித்தார். இதில் வசமாக சிக்கியது சீனாதான். ஒரு கட்டத்தில் உலக நாடுகள் கடுப்பாகி, அமெரிக்கா மேல் வரியைபோட.. டிரம்ப் இந்த வரி நடவடிக்கையை கைவிட்டார். ஆனால் சீனாவுக்கு மட்டும் வரி தொடர்ந்தது.
இந்த ஓரவஞ்சனை வரி முறையை எதிர்த்து, சீனா தொடர்ந்து சண்டை செய்து வந்தது. இந்த சண்டையின் ஒரு பகுதியாகத்தான் அரிய கனிமங்கள் மற்றும் காந்தங்கள் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது.
சீனாவின் மாஸ்டர் பிளான்
இது வேறு எந்த நாட்டை காட்டிலும் அமெரிக்காவைதான் கடுமையாக தாக்கியது. சாதாரண கம்ப்யூட்டர் சிப் தொடங்கி, பல கோடி ரூபாய் மதிப்பு மிக்க ஆடம்பர கார்கள் தயாரிப்பு வரை இந்த காந்தங்கள் தேவை. சப்ளை நின்றுபோனதால் அமெரிக்க நிறுவனங்கள் தள்ளாட தொடங்கின. இறுதியாக இந்த நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தும் கட்டத்திற்கு வந்து சேர்ந்திருக்கின்றன. எனவே எல்லா நிறுவனங்களும் சேர்ந்து டிரம்புக்கு அழுத்தம் கொடுக்க, அவர் தற்போது பேச்சுவார்த்தைக்கு முன் வந்திருக்கிறார்.
இந்த பின்னணியில்தான் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் பவ்யமாக இருந்து சீனாவுடன் சுமுகமாக ஒப்பந்தத்தை போடுவதை தவிர அமெரிக்காவுக்கு வேறு ஆப்ஷன் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல்












Click it and Unblock the Notifications