Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவை விட அமெரிக்காவில்தான் கொரோனா சோதனை அதிகம்.. மீண்டும் குத்திக் காட்டும் டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தியா உள்பட 9 நாடுகளைவிட நாங்கள் கொரோனா சோதனையை அதிகமாகவே செய்துள்ளோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் குத்திக் காட்டி பேசியுள்ளார்.

Recommended Video

    Why is Trump so excited to run the US? Sagayadevi Explains from US

    இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா தொடர்ந்து நிலையான முன்னேற்றத்தை அடைந்தது. எங்கள் நாட்டில் 41 லட்சம் மக்களுக்கு கொரோனா சோதனை செய்துள்ளோம்.

    உலகில் எந்த நாடும் இத்தனை அதிகமான சோதனையை செய்யவில்லை. நாங்கள் சாதனை படைத்துள்ளோம். நாங்கள் 9 நாடுகளை காட்டிலும் அதிகமாகவே கொரோனா பரிசோதனை செய்துள்ளோம்.

    அதிக விலை

    அதிக விலை

    பிரான்ஸ், பிரிட்டன், தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், இந்தியா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், கனடா உள்ளிட்ட 9 நாடுகளை காட்டிலும் அமெரிக்காவில் அதிகம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இது நல்லதொரு ஏற்றம். இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் லாக்டவுன் செய்யவும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் தயங்கின. அதனால்தான் அவர்கள் அதிக விலை கொடுக்க நேரிட்டுள்ளது.

    லாக்டவுன்

    லாக்டவுன்

    நாமும் எல்லைகளை மூடுவது, லாக்டவுன் செய்வது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது ஆகியவற்றில் தயக்கம் காட்டியிருந்தால் பல லட்சக்கணக்கானோர் இறந்திருப்பர். எங்களது கடுமையான வியூகங்கள் நன்றாக செயல்படுகின்றன. தன்னலமற்ற அன்பிற்கு நான் அமெரிக்க மக்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். நம் நாட்டு மக்கள் நிச்சயம் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றார்.

    சோதனை

    சோதனை

    கொரோனா வைரஸால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,64,303 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இறப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது. பலியானோரின் எண்ணிக்கை 500ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் அதிகம் பேருக்கு சோதனை நடத்தவில்லை என்பதை டிரம்ப் குத்திக் காட்டி பேசியுள்ளார்.

    உயிரிழப்புகள்

    உயிரிழப்புகள்

    ஆரம்பத்தில் லாக்டவுன் செய்ய அமெரிக்க அதிகாரிகள் ஆலோசனை கூறிய போது டிரம்ப் அதை செய்யாமல் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு மறுப்பு தெரிவித்தார். பின்னர் அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து லாக்டவுன் நடவடிக்கையை கையில் எடுத்தார். அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் லாக்டவுனை முன்பே செய்திருந்தால் இத்தனை பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் குறைத்திருக்கலாம். ஹைட்ராக்ஸிகுயின் மருந்து விவகாரத்தில் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த டிரம்ப் தற்போது இந்தியாவை குத்திக் காட்டி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+