இந்திய மாணவியை கார் ஏற்றி கொன்ற வழக்கு: கேலி பேசிய அமெரிக்க போலீஸ் அதிகாரி விடுவிப்பு.. என்ன நடந்தது
வாஷிங்டன்: அமெரிக்காவில் படித்து வந்த ஆந்திராவை சேர்ந்த மாணவி போலீஸ் ரோந்து வாகனம் மோதி உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய அமெரிக்க போலீஸ் அதிகாரி கேலி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமெரிக்க போலீஸ் அதிகாரி மீதான வழக்கை தொடர முடியாது என சியாட்டில் அட்டார்னி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில் ஆந்திராவை சேர்ந்த ஜானவி கண்டூலா என்ற மாணவி படித்து வந்தார். அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுநிலை படித்து வந்த ஜானவி கண்டுலா மீது போலீஸ் ரோந்து வாகனம் மோதியது. மணிக்கு 120 கி.மீட்டர் வேகத்தில் வந்த போலீஸ் ரோந்து வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மாணவி அங்கேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய ரோந்து வாகனத்தை கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி ஓட்டி வந்தார். விபத்துக்கு பின், சியாட்டி போலீஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு பேசிய டேனியல், மாணவி குறித்து கேலியாக பேசி சிரித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது, உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு பேசிய போலீஸ் அதிகாரி டேனியல், "இறந்த பெண் ஒரு சாதாரணமான ஒருவர் தான்.
பெரும் மதிப்பு மிக்க நபர் அல்ல. அவருக்கு 11,000 டாலர் காசோலையே போதும்" என சிரித்துக்கொண்டே பேசினார். அவரது சட்டையில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
விபத்தில் பலியான இந்திய மாணவியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கேலியாக பேசிய போலீஸ் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்.பிக்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், போலீஸ் அதிகாரி மீதான வழக்கு, கைவிடப்படுவதாகவும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தொடர போவது இல்லை என்றும் கிங் கவுண்டி மாகாணத்தின் அட்டார்னி லீசா மானியன் தெரிவித்துள்ளார். போலீஸ் அதிகாரி மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும் அட்டார்னி லீசா மானியன் கூறியுள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications