வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல்: எப்போது நிறைவடையும் வாக்குப்பதிவு.. ரிசல்ட் வெளியாவது எப்போது?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும், நவம்பர் 3 ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று துவங்கியுள்ளது.
அமெரிக்கா தனது 45 வது அதிபரை தேர்வு செய்ய உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் வாக்காளர்களை கவர அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது ஜனநாயக கட்சி எதிரணி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் இருவரும் கடைசி வரை கடும் முயற்சிகளை எடுத்தனர்.

இந்தியாவைப் போலல்லாமல், அமெரிக்காவில் தேர்தல் நாளிலேயே ரிசல்ட் தெரிந்துவிடுகிறது.

இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்.. மோதும் டிரம்ப்- பைடன்! தேர்வு நடைமுறை என்ன.. விவரம்! இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்.. மோதும் டிரம்ப்- பைடன்! தேர்வு நடைமுறை என்ன.. விவரம்!

வாக்குப் பதிவு எப்போது துவங்கும்?

வாக்குப் பதிவு எப்போது துவங்கும்?

அமெரிக்காவில் வாக்களிப்பை துவங்கும் இடம் வெர்மான்ட் நகரம்தான். அங்கு இந்திய நேரப்படி காலை 10.45 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியுள்ளது. நியூயார்க் மற்றும் வடக்கு டகோட்டாவில் இரவு 9 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி நவம்பர் 4 காலை 6:30 மணிக்கு நிறைவடையும்.

எங்கு பார்க்கலாம்?

எங்கு பார்க்கலாம்?

அமெரிக்க அதிபர் தேர்தல்கள் அனைத்து முக்கிய சர்வதேச தொலைக்காட்சி செய்தி சேனல்களிலும் (வியோன், பிபிசி, சிஎன்என், அல் ஜசீரா ஆங்கிலம் போன்றவற்றில்) ஒளிபரப்பப்படும். அமெரிக்காவில் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 257 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர், கிட்டத்தட்ட 240 மில்லியன் குடிமக்கள் ஓட்டுப் போட தகுதி பெற்றுள்ளனர். ஏற்கனவே 9.2 கோடி அளவுக்கான மக்கள் ஓட்டுப் போட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

நவம்பர் 3ம் தேதி வாக்களிப்பு நிறைவடையும் என்றாலும், இவை பாப்புலர் ஓட்டுக்கள் என்று அழைக்கப்படுகின்றன, ஆனால் அவை அமெரிக்காவின் அதிபரை நேரடியாக தீர்மானிக்கும் ஓட்டு அல்ல. இந்த வாக்குகள் அடிப்படையில் உருவாகும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுதான் அதிபருக்கு ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும்.

இந்த ஆண்டு புதியது என்ன?

இந்த ஆண்டு புதியது என்ன?

இந்த ஆண்டு கொரோனா பரவல் அச்சத்தால், கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க முடிவு செய்தனர். பொதுவாக, அந்த அஞ்சல் வாக்குகள் எண்ணுவதற்கு அதிக நேரம் எடுக்கும். தேர்தல் ஊழியர்கள் வாக்குச்சீட்டை எடுக்க வேண்டும், பிழைகளை சரிபார்க்க வேண்டும், அவற்றை வரிசைப்படுத்த வேண்டும். எனவே இதற்கு காலதாமதம் பிடிக்கும்.

English summary
The United States is all set to choose its 45th president as the state is set for elections on 3 November, the traditional date to cast vote in America. President Donald Trump and his Democratic challenger Joe Biden have left no stone upturned to woo voters amid the coronavirus pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X