நியூயார்க் மன்ஹட்டன் நீதிமன்றத்தில் சரணடைந்த டொனால்டு டிரம்ப்.. வெளியே குவிந்த ஆதரவாளர்கள்.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் சரண்டர் ஆகியுள்ளார். டிரம்ப் இன்று சரணடைந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே குவிந்துள்ளனர்.

உலகமே இன்று பெரிதும் எதிர்பார்க்கும் சம்பவம் என்றால் அது டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனதுதான். அமெரிக்க வரலாற்றிலேயே முன்னாள் அதிபர் ஒருவர் கிரிமினல் வழக்கு விசாரணையை எதிர்கொள்வது இதுவே முதல்முறை. அமெரிக்காவின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் டொனால்டு டிரம்ப் இன்று சரண் அடைந்தார்.

US Former President Donald Trump surrender New York Manhattan court, Supporters gathered outside

டிரம்ப் இன்று சரணடைந்த நிலையில், வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளே பின்பற்றப்பட இருக்கிறது. டிரம்ப் கைரேகை பெறப்படும். மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கப்படும். நீதிமன்ற நடவடிக்கைகள் ஒருபக்கம் சென்று கொண்டிருகக் டிரம்பின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே குவிந்துள்ளனர்.

டொனால்டு டிரம்பின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். டிரம்பிற்கு எதிரான தரப்பு அங்கு கூடினாலும் அதை விட அதிக எண்ணிக்கையில் ஆதரவாளர்கள் கூடியுள்ளனர். அதேசமயம் டொனால்டு டிரம்பின் விமர்சகர்கள், டொனால்டு டிரம்ப் சிறை சீருடையில் கம்பிகளுக்கு பின்னால் இருப்பது போன்ற பதாகைகளையும் வைத்திருந்ததை காண முடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+