மோசமான சூழலில்.. தொற்றை கட்டுப்படுத்துவதில் மோடி சிறப்பாக செயல்படுகிறார்.. அமெரிக்க எம்.பி பாராட்டு
பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்பி பாராட்டு தெரிவித்துள்ளார்
வாஷிங்டன்: இந்தியா ரொம்பவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில், பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கின்றன எனறு அமெரிக்க எம்பி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தொற்று காரணமாக 2 வருடமாக கதிகலங்கி போயிருந்த அமெரிக்கா, இப்போது தெம்பாகி வருகிறது.. தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் பெரும்பாலான உள் மற்றும் வெளி இடங்களுக்கு முகக்கவசம் இல்லாமல் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவிக்கும் அளவுக்கு அங்கு தொற்று கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.
ஆனால், இந்தியா மிக மோசமான நிலைமையில் உள்ளது.. பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு, இந்த 2வது அலை பரவலை தடுக்க பாடுபட்டு வருகிறது.

பிரதமர் மோடி
இந்நிலையில், பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கின்றன என்று அமெரிக்காவின் குடியரசு கட்சியின் எம்பி வில்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது:

இந்திய மக்கள்
"கொரோனா நோய் தொற்று பரவலால் கடுமையான துன்பத்துக்கு ஆளாகி உள்ள இந்திய மக்களுக்கு என்னுடைய வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன். வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறப்பு
இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும்... இந்தியா மிகவும் நெருக்கடியான கால கட்டத்தில் இருக்கும் இப்படிப்பட்ட சூழலில் பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் சிறப்பாகவே இருக்கின்றன. இந்திய, அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பினருடன் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு...

உதவி
அவர்களிடம் இந்தியாவில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து அவ்வப்போது கேட்டு தெரிந்து கொள்கிறேன்.. மேலும் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை அளிக்க என்னால் முடிந்த அளவுக்கு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்... இப்படி ஒரு சவாலில் இருந்து இந்தியா விரைவில் மீண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறியுள்ளார்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications