அணு குண்டு கன்ஃபார்ம்? இஸ்ரேலின் அந்த ஒரு வார்த்தை! உடனே நெதன்யாகுவிற்கு போன் போட்ட பைடன்!
வாஷிங்டன்: மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது மோசமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நேரடியாகப் போர் வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறிய சில கருத்துகள் சர்ச்சையான நிலையில், உடனடியாக அமெரிக்க அதிபர் பைடன் இந்த விவகாரம் குறித்து பிரதமர் நெதன்யாகுவிடம் பேசியுள்ளார்.
கடந்த ஓராண்டாகவே மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. முதலில் இஸ்ரேல்- ஹமாஸ் படையினருக்கும் இடையே தொடங்கிய இந்த மோதல் இப்போது மோசான நிலைக்குச் சென்றுள்ளது.

ஹமாஸை குறிவைத்து காசாவில் நடக்கும் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாகச் சொல்லி ஹிஸ்புல்லா இந்த மோதலில் குதித்தது. இதனால் ஹிஸ்புல்லா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து ஈரானும் இந்த விவகாரத்தில் உள்ளே வந்தது. இதுவே பதற்றம் அதிகரிக்கக் காரணமாகும்.
ஈரானுக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் எச்சரித்த நிலையில், உடனடியாக அமெரிக்க அதிபர் பைடன் நேரடியாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இரு நாடுகளும் இந்த தொலைப்பேசி உரையாடலை உறுதி செய்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்திய போது நெதன்யாகுவை பைடன் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். அதன் பிறகு இரு தலைவர்களும் ஆலோசிப்பது இதுவே முதல்முறையாகும்.
அதாவது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் இப்போது சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த ஹிஸ்புல்லா என்பது ஈரான் ஆதரவு பெற்ற ஒரு அமைப்பாகும். ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கடந்த மாதம் கொன்று இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான் சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் இதற்குப் பதிலடி தரலாம் என அஞ்சப்படுகிறது.
ஈரான் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட் கூறுகையில், "எங்கள் மீது தாக்குதல் நடத்தியது, அது யாராக இருந்தாலும் சரி அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும்.. எங்கள் பதிலடி துல்லியமானதாகவும் அதிக ஆபத்தானதாகவும் இருக்கும். குறிப்பாக யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆச்சரியமாக இருக்கும். என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளும் முன்பு பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கும்" என்று எச்சரித்து இருந்தார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவவும் இதற்குப் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்றும் மிகப் பெரிய அழிவைச் சந்திக்கத் தயாராக இருங்கள் என்பது போலவும் கூறியிருந்தார். இதுவே இப்போது அமெரிக்கா கவலைப்படக் காரணமாக இருக்கிறது. குறிப்பாக ஈரானின் அணுசக்தி தொழிற்சாலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் எனக் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் நிச்சயம் சர்வ நாசம் ஏற்படும். அது மூன்றாம் உலகப் போரையும் தொடங்கிவிடும். இப்படி எப்போது வேண்டுமானாலும் போர் பெரிதாக வெடிக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், நேரடியாக அமெரிக்க அதிபர் பைடனே லைனுக்கு வந்துள்ளார். லெபனானில் நடக்கும் தாக்குதல், ஹமாஸ் வசம் இருக்கும் பணைய கைதிகள், காசா மக்களின் நிலை குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய சூழலை வைத்துப் பார்க்கும் போது ஈரான் மீது இஸ்ரேல் உடனடியாக பதிலடி நடத்த வாய்ப்பு குறைவு என்றே வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். ஆனால், அமெரிக்கா நினைத்தது போலவே இஸ்ரேல் எப்போதும் நடந்த கொள்ளும் எனச் சொல்ல முடியாது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அமெரிக்கா எதிர்பார்த்த விட காசாவில் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை தொடங்கிவிட்டோம்.. நெருங்கினால் பேரழிவு! டிரம்ப் வார்னிங் -
10 நாள் தான் டைம்.. உலகமே ஸ்தம்பிக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த போராசிரியர்! -
நேக்கா 2 கப்பலை வெளியேற்றிய ஈரான்.. ஹார்முஸ்-ல் தவிக்கும் 800 கப்பல்.. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் அச்சம்! -
அமெரிக்காவின் 'ஹார்முஸ்' முற்றுகையில் இங்கிலாந்து பங்கேற்காது.. ட்ரம்ப்புக்கு 'நோ' சொன்ன பிரிட்டன் -
ஈரானுக்கு மிகப்பெரிய ஆஃபர் கொடுத்த ரஷ்ய அதிபர் புடின்.. அரண்டுபோன டிரம்ப் 'இது மட்டும் நடக்க கூடாது' -
டிரம்ப்: அதிபர் பதவியில் இருந்து துரத்தியடிக்கப்படுவாரா? அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடக்கும் பரபர வாக்கெடுப்பு -
ஈரான் ஈரக்குலையை நடுங்க வைக்கும் அறிவிப்பு.. டீல் பேசும் ட்ரம்ப்! நடு கடலில் தத்தளிக்கும் கப்பல்கள்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
ஈரான் மேட்டரில் நட்டாற்றில் விடப்பட்ட டிரம்ப்.. கழன்று கொண்ட பிரிட்டன்! கடைசியில் இப்படி ஆயிடுச்சே! -
இஸ்லாமாபாத் டூ இஸ்ரேல்! இடையே வந்த அந்த ஒரு போன் கால்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை பெயிலானது ஏன்? -
ஹார்முஸ் ஜலசந்தியில்.. அமெரிக்கப் படை முற்றுகை.. ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. உலகளவில் பதற்றம்!












Click it and Unblock the Notifications