வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவில் இருந்து மீண்ட உடனே பிரச்சாரத்தை துவக்கிய டிரம்ப்.. ஏற்படுத்திய அபாயம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா சிகிக்சை முடிந்த நிலையில் அதிபர் டொனால்டு டிரம்ப் புளோரிடாவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

Recommended Video

    Higher Risk பிரிவில் Trump | அடுத்து என்ன நடக்கும் ? | US Election | Oneindia Tamil

    அப்போது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்பு பேசிய அதிபர் டிரம்ப், "எனது சொந்த மாநிலமான புளோரிடாவில் நான் மீண்டும் பிரச்சாரத்திற்கு திரும்பி வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் உங்கள் பிரார்த்தனைகளால் மிகவும் உற்சாகமடைந்துள்ளேன். உங்கள் ஆதரவுக்கு நான் தலை வணக்குகிறேன்" என்று அவர் கூறினார். அத்துடன் தற்போது சக்தி வாய்ந்தவனாக உணர்வதாகவும், அனைவரையும் முத்தமிட விரும்புவதாகவும் கூறினார்.

    US president Election 2020: Trump holds 1st rally since contracting coronavirus

    அப்போது டிரம்பை சந்திக்க கூடிய ஆயிரக்கணக்கானோர் முககவசமும் இல்லாமல் சமூக இடைவெளியும் இல்லாமல் நெருக்கமாக நின்றிருந்ததால் கொரோனா பரவும் அபாயம் எழுந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிரம்ப், நேற்று தான் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டதாகவும் சோதனையில் நெகட்டிவ் வந்துள்ளதாகவும் கூறினார். அத்துடன் பிரச்சாரத்திற்கு செல்லப்போவதாகவும் கூறினார். நவம்பரில் நடைபெற உள்ள தேர்தலில் எப்படியும் வென்றுவிட வேண்டும் என்று முனைப்பு காட்டி வரும் டிரம்ப், கொரோனா நெகட்டிவ் வந்த ஒரு சில நாளிலேயே தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றுள்ளார். இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தனக்கு முழு நோய் எதிர்ப்பு சக்தி வந்துள்ளதாக கூறும் டிரம்ப் கொரோனா விதிமுறைகளை ஒரு நாள் கூட முறையாக கடைபிடித்தது இல்லை. நெகட்டிவ் வந்த உடனேயே மாஸ்க்கை கழற்றி வீசினார். இந்நிலையில் டிரம்ப் பென்சில்வேனியா, அயோவா, வட கரோலினா மற்றும் விஸ்கான்சினில் தேர்தல் பிரச்சாரத்தை அடுத்தடுத்து மேற்கொள்கிறார்.

    English summary
    Just a week after his release from the hospital, President Donald Trump returned to the campaign trail Monday for the first time since contracting the coronavirus as he tries to stage a late comeback in the election’s final stretch.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X