புடின் “ஒரு போர் குற்றவாளி”.. ரஷ்யா மீது கூடுதல் தடைகள்.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் தாக்கு..!
வாஷிங்டன் : உக்ரைனின் புச்சாவில் பொதுமக்களுக்கு எதிரானதாக ரஷ்யா ராணுவத்தின் அட்டூழியங்கள் குறித்து போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் எனவும், ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
Recommended Video
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நிலைமை அங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. ஆனால் ரஷ்யா போரை நிறுத்தவில்லை.
உக்ரைன் ராணுவமும் ரஷ்யாவுக்கு ஈடாக பதிலடி கொடுத்ததோடு, ஒரு போது பின்வாங்கப் போவதில்லை எனவும், சரணடையும் பேச்சுக்கே இடமில்லை என அந்நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உறுதிபட கூறியுள்ளார்.

உக்ரைன் போர்
போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வரும் நிலையில், பச்சிளம் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்காணோர் போரில் உயிரிழந்ததாகவும் ரஷ்யா மனிதாபிமானமற்ற முறையில் குடியிருப்பு வாசிகளை நோக்கி தாக்குதல் நடத்துவதாக புகார் கூறப்படுகிறது. மரியுபோல் நகரம் 90 சதவீதம் தகர்ப்பட்டுள்ளதாகவும், பல நகரங்கள் அடையாளம் தெரியாமல் தகர்க்கப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறுவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

பகீர் புகார்
மேலும் ரஷ்யாவின் ராணுவ வீரர்கள் உக்ரைன் நாட்டில் இருக்கும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து உடல்களில் முத்திரை குத்துவதாக மேலும் ஒரு பகீர் புகர் எழுந்துள்ளது. ரஷ்ய ராணுவ வீரர்களை கொலைகாரர்கள், கொடூரர்கள், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் எனவும், இவர்களுக்கு மரணம் மட்டுமே கிடைக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இனப்படுகொலை
இதற்கிடையே கடந்த சனிக்கிழமை உக்ரைனின் புச்சா நகரத்தில் வசித்த மக்களை அந்த நகரத்தை முன்னர் ஆக்கிரமித்திருந்த ரஷ்ய ராணுவத்தினர் கைகளை கட்டி தலையின் பின்னால் சுட்டுக் கொலை செய்ததாக அதிர்ச்சி தரும் புகைப்படங்கள் வெளியாகின. இதற்கு உலக அளவில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இதனை இனப்படுகொலை எனவும், போர்க் குற்றம் என உக்டைன் குற்றம் சாட்டியது.

போர் குற்ற விசாரணை
ரஷ்யாவுக்கு எதிராக ஜெர்மனி, இங்கிலாந்து, அல்பேனியா மற்றும் கொசோவோ நாட்டின் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். இந்நிலையில் உக்ரைனின் புச்சாவில் பொதுமக்களுக்கு எதிரானதாக ரஷ்யா ராணுவத்தின் அட்டூழியங்கள் குறித்து போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் எனவும், ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய பைடன், புடின் ஒரு " போர் குற்றவாளி" என்றும், கொலைகளை "போர்க்குற்றம்" என்றும் "போர்க்குற்ற விசாரணை" இருக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். "ஆம், நான் ரஷ்யா மீது கூடுதல் தடைகளை நாடுகிறேன்" என்றும் பிடன் கூறினார்.












Click it and Unblock the Notifications