வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வைரஸ் உயிரிழப்புகள்: உண்மையான எண்ணிக்கையை இந்தியா தரவில்லை- போட்டு தாக்கிய டிரம்ப்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வைரஸால் எத்தனை பேர் இறந்தனர் என்பது குறித்து இந்தியா உண்மையான எண்களை வெளியிடவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குண்டு போட்டுள்ளார்.

இதுநாள் இந்தியாவைவும், பிரதமர் மோடியையும் புகழ்ந்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்றிரவு ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுடன் நடந்த விவாதத்தின்போது இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கொரோனா இறப்பு எண்ணிக்கையை குறைத்து சொல்வதாக குற்றம் சாட்டினார்

மேலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதிலும் சீனா, ரஷ்யாவுடன் சேர்த்து இந்தியா மீதும் குற்றம் சாட்டினார் ட்ரம்ப்.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். துணை அதிபராக மைக் பென்ஸ் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஜோ பைடனும் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹார்ஸூம் போட்டியிடுகின்றனர்.

நீங்கள் ஒரு கோமாளி... வாயை மூடுங்கள்... இனவெறியாளர்... ட்ரம்ப்பை விளாசிய ஜோ பைடன்!! நீங்கள் ஒரு கோமாளி... வாயை மூடுங்கள்... இனவெறியாளர்... ட்ரம்ப்பை விளாசிய ஜோ பைடன்!!

பாக்ஸ் செய்தி

பாக்ஸ் செய்தி

முதன் முறையாக இன்று டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவரும் டிவி நிகழச்சியில் நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு இருந்தனர். பாக்ஸ் செய்தி சேனலில் இந்த விவாதம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்தியா

இந்தியா

இந்த விவாத்தின்போது, அமெரிக்காதான் உலகிலேயே அதிகளவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று பைடன் தெரிவித்தார். உடனடியாக குறுக்கிட்டு இந்த பழியை இந்தியா, சீனா மீது ட்ரம்ப் திணித்தார். சீனா, இந்தியாதான் அதிகளவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கின்றன. சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலும் எத்தனை பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து இருக்கின்றனர் என்பது நமக்குத் தெரியாது. ஏனென்றால், உயிரிழந்தவர்களின் உண்மையான எண்களை வெளியிடுவது இல்லை'' என்றார் ட்ரம்ப்.

முட்டாள்

முட்டாள்

அமெரிக்காவில் கொரோனாவால் எவ்வளவு குடும்பத்தினர் தங்களது நெருங்கிய அன்புக்குரியவர்களை இழந்துவிட்டனர். பொறுப்பு இல்லாமல் ட்ரம்ப் நடந்து கொண்டார். இந்த விஷயத்தில் ஒரு முட்டாள் போல நடந்து கொண்டார். அவர்தன்னை காப்பாற்றிக் கொள்ள மாஸ்க் அணிந்தாரே தவிர மக்களை காப்பாற்றுவதற்காக அணியுமாறு கூறவில்லை'' என்று பைடன் கூறினார்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

இதற்கும் பதில் அளித்துப் பேசிய ட்ரம்ப், ''சீனாவால்தான் இந்த துயரம் ஏற்பட்டுள்ளது. அதிபராக பைடன் இருந்து இருந்தால் அமெரிக்காவில் இரண்டு மில்லியன் மக்கள் உயிரிழந்து இருப்பார்கள்'' என்று சீனாவின் மீது பழியை தூக்கிப் போட்டார் ட்ரம்ப்.

ரஷ்யா

ரஷ்யா

இத்துடன் நின்றுவிடவில்லை. அமெரிக்காவில் மாசுக்கட்டுபாடு குறித்து பைடன் பேசினார். அமெரிக்காவில் பெரிய அளவில் மாசு ஏற்பட்டுள்ளது. இதற்கும் நீங்கள்தான் காரணம் என்றார் பைடன். இதற்கு பதில் அளித்த ட்ரம்ப், ''காற்றில் அசுத்தத்தை கலந்தவர்கள் சீனா, ரஷ்யா, இந்தியா'' ஆகிய மூன்று நாடுகள்தான் என்றார்.

மோடி

மோடி

இப்படி விவாதம் நடந்து கொண்டே இருந்தது. ஆனால், அமெரிக்கா வாழ் இந்தியர்களின் வாக்குகளை பெறுவதற்கு இருவரும் இதுநாள் வரை பேசி வந்தனர். இந்தியர்களை மெச்சினர். பிரதமர் மோடியை மெச்சினர். ஆனால். இன்றைய விவாதத்தில் இருவருமே இந்தியா குறித்து எதுவுமே பேசிவில்லை. பாராட்டவில்லை, மறந்தனர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மருந்து வழங்கியதையும் ட்ரம்ப் மறந்தார். இந்தியர்கள் பற்றியோ, அமெரிக்காவுக்கு அவர்கள் அளித்து வரும் பங்களிப்பு பற்றியோ பேசுவதற்கு இருவரும் தவறினர்.

English summary
Trump shifts blame to India, China during TV debate with Joe Biden
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X