மீண்டும் கொலை முயற்சி! கையில் துப்பாக்கி.. டிரம்ப்பை நெருங்கிய மர்ம நபர்.. திக்திக் சம்பவம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலைக் கொலை செய்ய ஏற்கனவே இரண்டு முறை முயற்சி நடந்துள்ளது. இதற்கிடையே கலிபோர்னியாவில் டிரம்ப் பேரணிக்கு மிக அருகே துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த ஒருவரை உள்ளூர் போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
அமெரிக்காவில் மிக விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அடுத்தாண்டு நடக்கும் இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார்.

அங்கு அடுத்த மாதம் 5ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலுக்கு சில காலம் மட்டுமே இருப்பதால் அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. ஸ்வீங் மாகாணம் எனப்படும் இழுபறி நிலவும் மாகாணங்களே யார் அதிபர் என்பதைத் தீர்மானிக்கும் என்பதால் அந்த மாகாணங்களைக் குறிவைத்தே பிரச்சாரம் நடந்து வருகிறது.
கொலை முயற்சிகள்: அதேநேரம் இந்த பிரச்சார கூட்டங்களில் ஏற்கனவே டிரம்ப்பை கொலை செய்ய இரண்டு முயற்சிகள் நடந்தன. முதலில் பென்சில்வேனியாவில் ஒரு கூட்டத்தில் டிரம்ப் பேசிக் கொண்டு இருக்கும் போது திடீரென அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். டிரம்ப்பின் காதில் தோட்டா பாய்ந்த போதிலும், மோசமான காயம் எதுவும் ஏற்படவில்லை. அதன் பிறகு சில வாரங்களில் புளோரிடா கோல்ஃப் மைதானத்தில் துப்பாக்கியுடன் நெருங்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்
கைது: இப்படி அடுத்தடுத்து கொலை முயற்சிகள் நடந்த போதிலும், டிரம்ப் தனது பிரச்சாரத்தை வழக்கம் போலவே தொடர்ந்து வருகிறார். அதன்படி கலிபோர்னியா மாகாணத்தில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள டிரம்ப் வந்திருந்தார். அப்போது அவரது பேரணிக்கு மிக அருகில் ஒருவர் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்துள்ளார். டிரம்ப் பேரணியின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அந்த நபரைப் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது தான் அவரிடம் 2 துப்பாக்கிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கைதை உறுதி செய்துள்ள சீக்ரெட் சர்வீஸ், இந்தச் சம்பவத்தால் டிரம்ப் உட்பட யாருக்கும் எந்தவொரு பாதிப்பு அல்லது காயமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே டிரம்ப் மீது 2 கொலை முயற்சி நடந்துள்ள நிலையில், அவருக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்ன நடந்தது: கைதான அந்த நபர் லாஸ் வேகாஸைச் சேர்ந்த 49 வயதான வெம் மில்லர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த நபர் துப்பாக்கி வைத்திருந்தார் என்பதைத் தவிர வேறு எந்தவொரு குற்றமும் இல்லை. இதனால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதேநேரம் அவர் மீது நீதிமன்ற விசாரணை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பேரணிக்கு அருகில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கு காரில் சென்ற மில்லரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த கலிபோர்னியா மாகாணத்தில் அதிகப்படியான மக்கள் டிரம்ப் பிரச்சாரத்திற்குத் திரண்டனர். இது பலருக்கும் ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது. ஏனென்றால் இந்த கலிபோர்னியா மாகாணத்தில் ஜனநாயக கட்சியினருக்கே ஆதரவு அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், குடியரசு கட்சியைச் சேர்ந்த வரம்பிற்குப் பெரியளவில் கூட்டம் கூடியுள்ளது பலருக்கும் ஆச்சரியம் தான். அதேநேரம் இவை எல்லாம் வாக்குகளாக மாறி டிரம்ப்பிற்கு பதவியை வாங்கி தருமா என்பதைப் பார்க்க நாம் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications