அமெரிக்க அதிபர் தேர்தல்.. 131 வாக்குகளுடன் ஜோ பிடன் முன்னிலை.. டிரம்ப் 92 வாக்குகளுடன் பின்னடைவு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்த பகுதிகளில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமாக 131 எலக்டோரல் வாக்குகளுடன் ஜோ பிடன் முன்னிலை வகித்து வருகிறார். டொனால்ட டிரம்ப் 92 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

அமெரிக்காவில் பல்வேறு நேரமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு பகுதியிலும் வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை மாறுபடுகிறது.

US Presidential Poll results 2020: Donald Trump wins Indiana, Kentucky

உள்ளூர் நேரப்படி வாக்குப் பதிவு நிறைவடைந்த இண்டியானா, கென்டகி, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இண்டியானாவில் 11 எலக்டோரல் வாக்குகளை டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கென்டகியில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக சி.என்.என். செய்தி நிறுவனம் கூறியுள்ளது. டெக்சாஸ், நியூ ஹாம்ஷ்பையரில் ஜோ பிடன் முன்னிலை வகிக்கிறார். தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

US Presidential Poll results 2020: Donald Trump wins Indiana, Kentucky

கடந்த தேர்தலிலும் தெற்கு கரோலினாவில் டிரம்ப் எளிதாக வெற்றிபெற்றார். அங்கு டிரம்ப் 9 எலக்ட்ரல் வாக்குகளை பெற்று வென்றுள்ளார். ஜார்ஜியாவில் 4 வாக்குகளுடன் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார். மேற்கு விர்ஜினியாவில் டொனால்ட் டிரம்ப் 5 எலக்டோரல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

அமெரிக்காவில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த அளவிற்கு இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது. 70%க்கும் அதிகமான தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதால் முடிவுகளை முழுமையாக அறிவிக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என்கிறார்கள்

தற்போதைய நிலவரப்படி 131 வாக்குகளுடன் ஜோ பிடன் முன்னணியில் இருக்கிறார். டொனால்ட் டிரம்ப் 92 வாக்குகளுடன் பின் தங்கி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+