இந்திய கல்வியாளர்களுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்கா! H-1B விசாவில் வரும் புதிய மாற்றம்!
வாஷிங்டன்: இந்தியா மீது வரி, அதை தொடர்ந்து H-1B விசாவுக்கு கட்டுப்பாடு, கட்டண உயர்வு என அமெரிக்க அரசு தொடர்ந்து இந்தியர்களை குறிவைத்து வருகிறது. இந்நிலையில், தற்போது இந்திய கல்வியாளர்கள் அமெரிக்காவுக்குள் வருவதை குறைக்கும் நோக்கில் புதிய விசா கட்டுப்பாடுகளை கொண்டு வர அந்நாட்டு அரசு முயற்சித்துள்ளது.
அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து திறமையான பணியாளர்களை வேலைக்கு எடுத்து வருகிறது. இதற்காக H-1B விசா பயன்படுகிறது. ஆனால் ஆண்டுக்கு 85,000 என்கிற அளவில்தான் வெளிநாட்டு ஊழியர்களை எடுக்க முடியும். இதுதான் லிமிட். இதுவே லாப நோக்கமற்ற நிறுவனங்கள், உதாரணமாக புற்றுநோய் குறித்து ஆய்வு நடத்தும் நிறுவனங்கள் மற்ற நாடுகளிலிருந்து எவ்வளவு ஆய்வாளர்களை வேண்டுமானாலும் பணிக்கு எடுக்கலாம். ஏனெனில் இது ஆய்வு நிறுவனம்.

அதேபோல பல்கலைக்கழகங்களும் இப்படி வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் இந்திய கல்வியாளர்கள் அதிக அளவில் அமெரிக்காவில் பணியாற்றி வந்தனர். இப்படியான லாப நோக்கமற்ற சேவைக்கு ஆட்களை வேலைக்கு எடுக்க எந்த லிமிட்டும் கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் H-1B விசா மூலம் எடுத்துக்கொள்ளலாம்.
இந்நிலையில், இந்த திட்டத்திற்கு தற்போது அமெரிக்க அரசு முட்டுக்கட்டை போட இருக்கிறது. அதாவது, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான, டாம் காட்டன், H-1B விசா மூலம் அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை கட்டுப்படுத்த புதிய சட்ட திருத்த மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், லாப நோக்கமற்ற துறையில் H-1B விசா மூலம் பணியமர்த்தப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையை வரம்புக்குள் கொண்டுவர வழி வகுக்கிறது.
அதாவது இனி பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மையம் போன்ற லாப நோக்கமற்ற அமைப்புகளிலும் ஆண்டுக்கு 85,000 H-1B விசா பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இது இந்திய ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்களை கடுமையாக பாதிக்கும். மற்ற நாடுகளை விட இந்தியர்கள்தான் அதிக அளவில் H-1B விசாவை கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே H-1B விசாவுக்கு கட்டணம் அதிகரிகப்பட்டதால், இந்தியர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். அதன் தாக்கம் குறைவதற்குள் புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்கா அரசு கொண்டுவர முயற்சிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படி செய்தவன் மூலம் வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க அரசு நம்புகிறது. ஆனால் அறிவியல், கல்வி உள்ளிட்ட லாப நோக்கமற்ற துறைகளில் கூட்டு முயற்சி, கூட்டு ஆராய்ச்சி அவசியம். இதன் பலனை மொத்த உலகமும்தான் அனுபவிக்க போகிறது. எனவே இந்த துறைகளில் இப்படியான கட்டுப்பாடுகள் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications