"பயங்கர சத்தம்.. இனப்பெருக்கம் வேற.." லட்ச கணக்கில் திரள்வதால் மிரட்சி.. அமெரிக்காவில் அதிசயம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இல்லினாய்ஸ் என்ற பகுதியில் ஒரே இடத்தில் அதீத சத்தத்துடன் இனப்பெருக்கம் நடக்கும் சம்பவங்கள் அரங்கேறப் போகிறது. அது என்ன சம்பவம்.. ஒரே இடத்தில் இப்படித் திரண்டு வந்து உடலுறவு கொள்ள என்ன காரணம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
இயற்கை என்பது பல அதிசயங்களைக் கொண்டதாகவே இருக்கிறது. நாம் கனவிலும் நினைத்துக் கூட பார்க்காத பல அதிசயங்கள் உலகில் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படியொரு வினோதமான சம்பவம் தான் அமெரிக்காவில் நடந்துள்ளது.

இனப்பெருக்கம்: அமெரிக்காவில் பல வகையான சிக்காடா, அதாவது சில்வண்டுகள் இருக்கிறது. இதனால் பெரியளவில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பதால் அமெரிக்காவில் இதை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். இந்த சிக்காடா வகைகள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை மிகப் பெரியளவில் ஒரே இடத்தில் திரண்டு இனச்சேர்க்கையில் ஈடுபட்டு, முட்டையிட்டு பின்னர் உயிரிழக்கும். இவை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.
அங்குப் பல வகையான சிக்காடா இருக்கும் நிலையில், ஒவ்வொரு வகையும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி செய்யும். பொதுவாக அவை 13 அல்லது 17 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படிச் செய்யும். ஏன் இதுபோல odd வருடங்களில் மட்டும் இனப்பெருக்கம் செய்கிறது என்பது ஆய்வாளர்கள் மத்தியில் மர்மமாகவே இருந்து வருகிறது.
இயற்கை அதிசயம்: அதேநேரம் இவை திரண்டு வரும் போல ஒரே நேரத்தில் பல லட்சம் சிக்காடாக்கள் வரும். அவை பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். மேலும், இவை திரண்டு வரும் போது அவை பாலியல் ரீதியாகத் தூண்டப்பட்ட நிலையில் இருக்குமாம். ஆண் மற்றும் பெண் சிக்காடாக்கள் அதீத சத்தம் எழுப்பி உடலுறவு கொள்ளுமாம். இந்த இயற்கை அதிசயத்தை ஓடி ஓடிச் சென்று பார்க்கவே அமெரிக்காவில் பலர் இருக்கிறார்கள்.
இந்தாண்டு இதில் என்ன சிறப்பு என்றால் ஒரே நேரத்தில் இரண்டு வகையான சிக்காடாக்கள் இந்தாண்டு இனப்பெருக்க நிகழ்வில் ஈடுபடப் போகிறதாம். இதற்கு முன்பு 1803இல் தான் இதுபோல நடந்துள்ளது. அதன் பிறகு இப்போது தான் சுமார் 220 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற சம்பவம் நடக்கிறது. சமீபத்தில் தான் அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் நடந்து சூரியன் மொத்தமாக மறைந்த நிலையில், இப்போது சில வாரங்களில் மற்றொரு இயற்கை அதிசயம் நடக்கிறது.
என்ன நடக்கிறது: இந்த ஆண்டு நிகழ்வில் 13 ஆண்டுகள் உயிர் வாழும் ப்ரூட் 19 என்ற வகை இந்த மாஸ் இனப்பெருக்கத்தில் ஈடுபட உள்ளது. அதைத் தொடர்ந்து 17 ஆண்டுகள் உயிர் வாழக்கூடிய ப்ரூட் 13 வகையும் இனப்பெருக்கத்தில் ஈடுபடப் போகிறது. இவை இரண்டும் மத்திய இல்லினாய்ஸ் பகுதியில் ஒரு இடத்தில் ஒன்றுடன் ஒன்று இணையலாம் என்று கூறப்படுகிறது.
அந்த இடத்தில் பல லட்சம் சிக்காடாக்கள், அதாவது சில்வண்டுகள் ஒரே இடத்தில் சந்திக்க உள்ளது. அந்த சிக்காடாக்களை டிராக் செய்து அவற்றை பார்க்க இப்போது அமெரிக்கர்கள் ரெடியாகிவிட்டார்களாம். இது பலரும் வியக்கும் ஒரு சம்பவமாக இருந்தாலும், இப்போது சிக்காடாக்கள் ஆபத்தில் இருக்கிறதாம்.
ஆபத்து: பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சிக்காடாக்கள் பெரும் ஆபத்தில் இருக்கிறது. குறிப்பாகப் புவி வெப்ப மயமாதல் என்பது சிக்காடாக்களின் செயல்பாடுகளைக் கடுமையாகப் பாதிப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த சிக்காடாக்கள் உணவு சங்கிலியில் முக்கிய இடத்தில் இருப்பதால் இதற்கு ஏற்படும் ஆபத்து ஒட்டுமொத்தமாகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications