அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு கொரோனா உறுதி..! 3 டோஸ் தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன் : இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், தற்போதைய அமெரிக்க துணை அதிபருமான கமலா ஹாரிஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக உலக அளவில் குறைந்து இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருவது மருத்துவ நிபுணர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி போடுவது அதிகரிக்கப்பட்டு இருந்தாலும் பள்ளிகள் திறப்பு ஒருவார கட்டுப்பாடுகள் நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு அதன் காரணமாகவும், மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு அதன் காரணமாகவும் அங்கு கொரோனா வைரஸ் பரவலானது கட்டுக்குள் வந்தது இதேபோல உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. இதனையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தற்போது தளர்தப்பட்டுள்ளது.

கமலா ஹாரிஸுக்கு கொரோனா

கமலா ஹாரிஸுக்கு கொரோனா

இந்நிலையில் அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் அவருக்கு லேசான பாதிப்பு மட்டுமே இருக்கிறது எனவும், ஆபத்தில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு கொரோனா ஏ சிம்டமெடிக் எனப்படும் அறிகுறியில்லா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அதே நேரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் அவர் தொடர்பில் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அறிகுறி இல்லை

அறிகுறி இல்லை

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலின்படி , "துணை அதிபர் கமலா ஹாரீஸ் பிசிஆர் சோதனையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு துணை அதிபர் மாளிகையிலிருந்து தொடர்ந்து பணி செய்வார் எனவும், தற்போது அவர் நலமாக உள்ள நிலையில் கொரோனா வழிகாட்டுதல்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைக்கு பின்பு சோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்த பின்னர் வெள்ளை மாளிகைக்கு திரும்புவார்" என கூறப்பட்டுள்ளது.

3 டோஸ் தடுப்பூசி

3 டோஸ் தடுப்பூசி

57 வயதான கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசியான மாடர்னா தடுப்பூசியின் முதல் டோஸை துணை அதிபராக பதவியேற்கும் சில வாரங்களுக்கு முன்பும், இரண்டாவது டோஸ் 2021இல் பதவியேற்ற நாளுக்குப் பிறகும் செலுத்திக் கொண்டார். அக்டோபர் மாத இறுதியில் ஒரு பூஸ்டர் ஷாட்டையும் ஏப்ரல் 1 அன்று எடுத்துக் கொண்ட நிலையில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+