இன்ஸ்டாகிராம் மூலம்.. 7 மில்லியன் டாலர் திரட்டி.. ஆப்கான் மக்களுக்கு உதவி புரிந்த மீம்ஸ் கிரியேட்டர்
வாஷிங்டன்: இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமடைந்த அமெரிக்க இளைஞர் ஒருவர் 6.7 மில்லியன் டாலர்களுக்கு மேல் நிதி திரட்டி ஆப்கான் மக்கள் வெளியேற உதவி புரிந்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போரை தாலிபான்கள் முடிவுக்கு கொண்டு வந்து விட்டனர். அங்கு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் ஆயிரக்கணக்கானோர் அங்கு இருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

ஆப்கன் மக்களுக்கு உதவி
தாலிபான்கள் பெண்களை மிக மோசமாக நடத்துவார்கள் என்று பழைய வரலாறு கூறுவதால் அதற்கு பயந்து ஆப்கானில் இருந்து எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என்று நினைக்கும் மக்கள் ஒட்டுமொத்தமாக காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். ஆப்கானில் இருந்து வெளியேறி வேறு நாடுகளில் அடைக்கலம் கேட்கும் ஆப்கன் மக்களுக்கு பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் அவர்கள் ஆப்கானை விட்டு வெளியேற உதவி செய்து வருகின்றனர்.

டோமி மார்கஸ்
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமடைந்த அமெரிக்க இளைஞர் பல மில்லியன் நிதி திரட்டி ஆப்கான் மக்கள் வெளியேற உதவி புரிந்துள்ளார். 25 வயதுடைய டோமி மார்கஸ் என்னும் அந்த இளைஞர் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர் ஆவார். இன்ஸ்டாகிராமில் பிரபலமான மீம் பக்கமான @quentin.quarantio என்னும் பக்கத்தில் கொரோனா தடுப்பூசிகளை எதிர்ப்பவர்கள் குறித்து ரசிக்கும்படியான மீம்ஸ்களை டோமி மார்கஸ் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

7 மில்லியன் டாலர்
தற்போது இன்ஸ்டாகிராம் மூலம் 7 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டி ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவித்த 350 பேரை பத்திரமாக மீட்க உதவி செய்துள்ளார் டோமி மார்கஸ். GoFundMe என்னும் ஹேஷ் டேக் மூலம் ஆப்கான் நிலை குறித்து விழிப்புணர்வு செய்து 6.7 மில்லியன் டாலர்களுக்கு மேல் நிதி திரட்டி இருக்கிறார். ஆப்கான் மக்களை வெளியேற்றுவதற்காக டோமி மார்கஸ் அமெரிக்க இராணுவம் மற்றும் பிற தன்னார்வக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

எதிர்காலம் என்னவாகும்?
மார்கஸின் GoFundMe முதல் இரண்டு மணி நேரத்தில் 800 ஆயிரம் டாலர் நிதி திரட்டியது குறிப்பிடத்தக்கது. GoFundMe மூலம் திரட்டப்பட்ட நிதி கடந்த 25ம் தேதி 'Operation Flyaway'என்ற திட்டம் மூலம் தனியார் அமைப்புடன் இணைந்து ஆப்கன் மக்கள் விமானம் மூலம் உகாண்டா அழைத்து செல்ல உதவியது. ''இந்த சூழ்நிலையில் நாங்கள் அரசியல் பிளவுகளைக் களைந்துவிட்டோம், உண்மையில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்று திரண்டு இந்த மக்களை காப்பாற்றுவோம், ஏனென்றால் அவர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும்?" என்று கூறினார் டோமி மார்கஸ்.

பாராட்டு
''அதிசயத்தைத் தவிர வேறு எந்த வார்த்தையைப் பயன்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் அது மனிதநேயத்தில் நம்பிக்கையை மீட்டெடுத்தது'' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மீம்ஸ் கிரியேட்டர் டோமி மார்கஸ். இவரின் இன்ஸ்டாகிராமில் பக்கத்தை பின்பற்றும் 8,32,000 பேரில் 1,21,000 க்கும் அதிகமான மக்கள் நிதி உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.டோமி மார்கசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications