'கவலை வேண்டாம், நாங்கள் இருக்கிறோம்..' இந்தியாவுக்கு கூடுதல் நிதி.. நன்றி மறக்காமல் உதவும் அமெரிக்கா
வாஷிங்டன்: கொரோனா 2ஆம் அலையால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இந்தியாவுக்குக் கூடுதலாக 41 மில்லியன் டாலர் உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்தது. நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பு மிக வேகமாகப் பரவியது
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக மூன்று லட்சத்தைக் கூட தாண்டியது. அதேபோல உயிரிழப்புகளும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.

கொரோனா 2ஆம் அலை
நாட்டில் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலைக்குச் செல்ல உருமாறிய டெல்டா வகை கொரோனா முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின. ஒரு புறம் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்பட்டது, மறுபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறை சரியான நேரத்தில் படுக்கைகள் கிடைக்காமல் போனது உள்ளிட்டவை காரணமாகவும் பலர் உயிரிழந்தனர்.

41 மில்லியன் டாலர்
கொரோனா 2ஆம் அலையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது. இந்நிலையில், இந்தியாவுக்கு உதவும் வகையிலும், வரும் காலத்தில் ஏற்படும் அடுத்த கொரோனா அலையை எதிர்கொள்ளச் சுகாதார கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்திருக்க உதவும் வகையிலும் கூடுதலாக 41 மில்லியன் டாலர் உதவியாக வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

மொத்தம் 200 மில்லியன் டாலர்
இதன் மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கவுள்ள மொத்த உதவி 200 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது குறித்து சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் நாட்டிற்கு உதவி தேவைப்பட்ட போது இந்தியா உதவி செய்தது. இப்போது கொரோனாவை எதிர்த்துப் போராடுவதால் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி பணிகள்
இந்த நிதியைக் கொண்டு இந்தியாவில் கொரோனா பரிசோதனை, நோயாளிகளுக்கு மனநல சேவைகள், கிராம் புறப் பகுதிகளில் சுகாதார உட்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தலாம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் நிதியுதவி மூலம், இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் தடுப்பூசி பணிகளிலும் இந்தியாவுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications