வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆபாச படங்களை வெளியிடும் இணையதள நிறுவனர் ஸ்பெயினில் கைது.. நாடு கடத்த எப்.பி.ஐ தீவிரம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து ஆபாச படங்களை வெளியிட்டு வந்த இணையதளத்தின் நிறுவனரான மைக்கேல் ஜேம்ஸ் ப்ரட் என்பவர் ஸ்பெயின் நாட்டில் கைது செய்யப்பட்டார்.

தற்போது ஸ்பெயினில் பிடிபட்டுள்ள மைக்கேல் ஜேம்ஸ் ப்ரட்டை அமரிக்காவிற்கு நாடு கடத்தி கொண்டு வருவதற்கான பணிகளில் எப்.பி.ஐ ஈடுபட்டுள்ளது. நாடு கடத்தலுக்குப் பிறகு ப்ரட் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெறும் என்று எப்.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இளம்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட வைத்தது தொடர்பான குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுகவிலேயே இருந்திருக்கலாம்.. புலம்பும் சூர்யா சிவா! பாஜகவில் பலர் விலக சொன்னாரு பாருங்க காரணம் திமுகவிலேயே இருந்திருக்கலாம்.. புலம்பும் சூர்யா சிவா! பாஜகவில் பலர் விலக சொன்னாரு பாருங்க காரணம்

ஆபாச படங்கள்

ஆபாச படங்கள்

இணையதளங்க்ளில் எத்தனையோ பயனுள்ள தகவல்கள் கொட்டிக்கிடக்கிற நிலையில், தேவையற்ற பல தகவல்களும் கடல் போல நிறைந்து காணப்படுகிறது. அந்த வகையில் தான் ஆபாச படங்களை வெளியிடும் வெப்சைட்டுகளும் நூற்றுக்கணக்கில் குவிந்து இருக்கின்றன. இதுபோன்ற இணையதளங்களை இந்திய அரசு கூட அவ்வப்போது தடை விதித்தாலும் கூட புதுப் புது பெயர்களில் மறுநாளே காளான் போல முளைத்து விடுவதுண்டு. கோடிக்கணக்கில் வருவாய்களையும் ஆபாச இணையதளங்கள் ஈட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

இதனால், வெளிநாடுகளில் பலரும் இதுபோன்ற இணையதளங்களை நிறுவி ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து ஆபாச படங்களை மைக்கேல் ஜேம்ஸ் ப்ரட் என்பவர் வெளியிட்டு வந்தார். இளம்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட வைத்தது தொடர்பான குற்றச்சாட்டு அவர் மீது எழுந்தது. இதையடுத்து, கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக மைக்கேல் ஜேம்ஸ் பிரட் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.

தேடப்படும் நபர்களின் பட்டியலில்..

தேடப்படும் நபர்களின் பட்டியலில்..

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐயால் அதிகம் தேடப்படும் நபர்களின் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இருந்த மைக்கேல் ஜேம்ஸ் ப்ரட் ஸ்பெயினில் பிடிபட்டுள்ளார். 3 ஆண்டுக்ளாக தேடப்பட்டு வந்த பிரட்- மட்ரிட் நகரில் வைத்து ஸ்பெயின் போலீசர் கைது செய்தனர். நியூசிலாந்தை பிறப்பிடமாக கொண்ட பிரட் விரைவில் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட நடைமுறைகள் தொடங்கியிருக்கின்றன.

22 பெண்கள் அளித்த புகாரின் பேரில்..

22 பெண்கள் அளித்த புகாரின் பேரில்..

குழந்தைகள் தொடர்பான ஆபாச படம், பாலியல் மோசடி, மைனர்கள் மீதான பாலியல் மோசடி, பண முறைகேடு உள்ளிட்ட கொடூர குற்றச்சாட்டுக்கள் பிரட் மீது உள்ளன. பிரட் நிறுவிய ஆபாச இணையதளமும் ஏற்கனவே முடக்கப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிரட் உள்பட அவருக்கு ஆபாச படங்கள் தயாரிக்க உதவியாக இருந்த நபர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவும் ஒப்பந்தத்தை மீறி தங்களுக்கு துன்புறுத்தல்கள் நடைபெற்றதாகவும் சுமார் 22 பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில்தான் பிரட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

12.7 மில்லியன் அபராதம்

12.7 மில்லியன் அபராதம்

ஒப்பந்தத்தில் கையழெத்திடுவதற்கு முன்பாக தங்களுக்கு போதைப்பொருட்களை வழங்கி முறையாக ஒப்பந்த விதிகளை படிக்க விடாமல் செய்ததாக சில பெண்களும்.. பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சில பெண்களும் குற்றச்சாட்டு வைத்திருந்தனர். இந்த வழக்கில் பிரட்டிற்கு 12.7 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. ஆபாச படங்களை தயாரித்த ரூபேன் ஆண்ட்ரே கார்சியாவிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் கேமரா மேனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்பெயினில் பிடிபட்டுள்ள பிரட்டை அமரிக்காவிற்கு நாடு கடத்தி கொண்டு வருவதற்கான பணிகளில் எப்.பி.ஐ ஈடுபட்டுள்ளது. நாடு கடத்தலுக்குப் பிறகு பிரட் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெறும் என்று எப்.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
Michael James Pratt, the founder of a website that published pornographic images from the state of California, USA, was arrested in Spain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X