Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வசமாக சிக்கிய டிரம்ப்! ஆபாச அழகி விவகாரம்! என்ன கேஸ், தண்டனை என்ன! 5 பரபர கேள்விகளும் எளிய விளக்கமும்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார். இந்த கேஸ் பற்றி பலருக்கும் எழும் ஐந்து கேள்விகள் குறித்தும் அதற்கான பதிலையும் பார்க்கலாம்.

உலகமே இன்று பெரிதும் எதிர்பார்க்கும் சம்பவம் என்றால் அது டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராவது தான். அமெரிக்க வரலாற்றிலேயே முன்னாள் அதிபர் ஒருவர் கிரிமினல் வழக்கு விசாரணையை எதிர்கொள்வது இதுவே முதல்முறை.

முன்னாள் அமெரிக்க அதிபரான டிரம்ப், இப்போது எதிர்கொள்ளும் புகார்கள் என்ன? அவருக்கு என்ன தண்டனை? எனப் பலருக்கும் எழும் ஐந்து கேள்விகள் குறித்தும் அதற்கான பதிலையும் பார்க்கலாம்.

 1 இந்த கேஸ் என்ன?

1 இந்த கேஸ் என்ன?

கடந்த 2016 அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்டது அனைவருக்கும் தெரியும். அந்த சமயத்தில் டிரம்ப்புக்கு இரு பெண்களுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்தது. இது குறித்து பொது வெளியில் பேசக் கூடாது என்று டிரம்ப் தரப்பு ஒப்பந்தம் போட்டுள்ளது. டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், இதில் டிரம்பிற்கு எதிராகச் சாட்சியம் அளித்தார். ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு ஷெல் நிறுவனம் மூலம் $130,000 அளித்ததாக ஒப்புக் கொண்டார். டிரம்ப் அந்த தொகையை வழக்கறிஞருக்குத் திருப்பியும் அளித்துள்ளார்.

 2 டிரம்ப் மீதான குற்றப்பத்திரிகை (indictment) என்ன?

2 டிரம்ப் மீதான குற்றப்பத்திரிகை (indictment) என்ன?

குற்றப்பத்திரிகை (indictment) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஆவணமாகும். இதில் குற்றச்சாட்டுகள் குறித்த அடிப்படைத் தகவல்கள் இருக்கும். பொதுவாக ஜூரி ஒருவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த பின்னரே இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.

டிரம்ப் மீதான குற்றப்பத்திரிகை சீல் வைக்கப்பட்டு கவரில் உள்ளது. அதில் என்ன இருக்கிறது என யாருக்கும் தெியாது. நியூயார்க் சட்டப்படி அனைத்து பெலனி குற்றங்களும் சீல் வைக்கப்பட்ட கவரில் தான் வைக்கப்படும். அது பொது வெளிக்கு வரும் போது தான் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் தெரிய வரும்.

 3 டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் என்ன

3 டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் என்ன

சீலிடப்பட்ட கவரில் குற்றப்பத்திரிக்கை இருப்பதால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன என்பது குறித்து பகிரங்கமாக யாருக்கும் எதுவும் தெரியாது. இருப்பினும், ஒரு பெலனி குற்றம் உட்பட பல்வேறு வழக்குகள் அவர் மீது இருப்பதாக இந்த விஷயத்தில் விவரம் அறிந்த சிலர் ஏ.பி. ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளனர். டிரம்ப் வேண்டுமென்றே இந்த தவறை செய்தார் என்பதை வழக்கறிஞர் நிரூபிக்க வேண்டும்.

டிரம்ப் வேண்டுமென்ற தனது பிஸ்னஸ் ரெக்கார்டுகளை மாற்றினார் என்று அவர்கள் நிரூபிக்க வேண்டும். இரண்டாவது குற்றம் செய்ய இதைச் செய்தார் என்பதை நிரூபிக்க வேண்டும். இரண்டாவது குற்றம் என்ன எதைச் சொல்கிறார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது பிரச்சார நிதி விதிமீறலாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

 4 இன்று என்ன நடக்கும்

4 இன்று என்ன நடக்கும்

இன்று arraignment என்ற செயல்முறை நடக்கும். குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் முதல்முறையாக ஆஜராவது தான் arraignment என்று அழைக்கப்படும். அப்போது டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைக் கூறி, அவருக்கு இருக்கும் உரிமைகளையும் நீதிபதி விளக்குவார். அப்போது டிரம்ப் தான் எந்தவொரு குற்றத்தையும் செய்யவில்லை என்று மனுத் தாக்கல் செய்வார். இன்றைய தினம் தான் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் பொதுவெளிக்கு வர உள்ளது.

இன்று வழக்கு விசாரணை முடிந்த பிறகு டிரம்ப் வழக்கம் போலத் தனது இல்லத்திற்குத் திரும்புவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் டிரம்ப் தப்பியோட வாய்ப்புள்ளதாக நீதிபதி கருதினால் அவரை சிறை வைக்கலாம். ஆனால் டிரம்ப் வழக்கறிஞர்கள் இது நடக்காமல் பார்த்துக் கொள்வார்கள்.

 5 டிரம்பிற்கு அதிகபட்சம் என்ன தண்டனை கிடைக்கும்

5 டிரம்பிற்கு அதிகபட்சம் என்ன தண்டனை கிடைக்கும்

டிரம்ப் மீதான குற்றம் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபணமானால் வரி மோசடி குற்றச்சாட்டில் IRC §7201 சட்டப்படி அவருக்குத் தண்டனை விதிக்கப்படும். வரி ஏய்ப்பு குற்றச்சாட்டிற்கு $100,000 (இந்திய மதிப்பில் 82 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும். அதேபோல வழக்கு தொடர்பான செலவுகளும் அவரிடம் இருந்தே வசூலிக்கப்படும். மேலும், இந்த குற்றச்சாட்டிற்காக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஆனால், விசாரணை முடிந்த பின்னரே இது தெரிய வரும்.

 அதிபர் தேர்தல்

அதிபர் தேர்தல்

இத்துடன் மற்றொரு கேள்வியும் அனைவருக்கும் இருக்கும் அதாவது டிரம்ப் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது தான். அமெரிக்க சட்டப்படி ஒருவர் குற்றவாளியாக இருப்பது அவரை தேர்தலில் போட்டியிடுவதை எந்த விதத்திலும் தடுக்காது. அமெரிக்க அரசமைப்பின்படி, அதிபர் பதவியில் இருப்பவர் குற்றமற்றவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. செய்த தவறுக்கு சிறையில் இருக்கும் போதும் கூட, ஒருவர் பிரசாரம் செய்யவும் அதிபராகச் செயல்படவும் முடியும் என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+