"அணு ஆயுத பேரழிவு.." புதைந்து கிடக்கும் ஆபத்து! பாபா வாங்கா சொன்ன அந்த வார்த்தை! மிரளும் உலக நாடுகள்
வாஷிங்டன்: பாபா வாங்கா வரும் காலத்தில் என்ன நடக்கும் என்று கணித்தவர்களில் புகழ் பெற்றவர். இதற்கிடையே இந்தாண்டு இறுதிக்குள் மோசமான அணு பேரழிவு நடக்கும் என்று இவர் கணித்துள்ளார். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள யாருக்குத் தான் பிடிக்காது. அதேபோல வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கண்டறியத் தொடர்ந்து பலரும் முயன்றே வருகின்றனர்.
அப்படி வரும் காலத்தைத் துல்லியமாகக் கணித்தவர்களில் முக்கியமானவர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா.. பல்கேரியா நாட்டில் 1911 முதல் 1996 வரை வாழ்ந்த இவரைப் பலரும் பாபா வாங்கா என்றே குறிப்பிடுகின்றனர்.

பாபா வாங்கா: 81 வயது வரை வாழ்ந்த பாபா வாங்கா தனது 12 வயதில் புயலால் தனது பார்வையை இழந்தார். அதன் பின்னரே அவருக்கு எதிர்காலத்தைப் பார்க்கும் அரிதான சக்தி கிடைத்ததாக நம்பப்படுகிறது.
இவர் சொன்ன பல விஷயங்கள் அப்படியே நடந்துள்ளது. அதுவும் ஏதோ சின்ன சின்ன விஷயங்கள் இல்லை.. இரட்டை கோபு தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுதல் என அனைத்தும் நடந்துள்ளன. இவை மட்டுமின்றி செர்னோபில் பேரழிவு, இளவரசி டயானா மரணம், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, 2004 எனப் பலவற்றைத் துல்லியமாகக் கணித்துள்ளார்.
ஷாக் கணிப்பு: இதன் காரணமாகவே இவரது கணிப்புகள் எப்போதும் கவனம் பெறுகிறது.. இதற்கிடையே இந்தாண்டு இவரது கணிப்புகளில் ஒன்று எனக் கூறிய டிரெண்டாகும் ஒரு செய்தி அனைவருக்கும் கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்தாண்டு இறுதிக்குள் ஒரு அணுசக்தி பேரழிவு பூமியில் ஏற்படும் என அவர் கணித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவரது கணிப்புகளில் 85% துல்லியமாக நடந்துள்ளன. இதனால் எங்கு இந்த பேரழிவும் அப்படியே நடக்குமோ என அனைவரும் அஞ்சுகின்றனர்.
இந்த பேரழிவால் குறிப்பிட்ட நாடு மட்டும் பாதிக்கப்படாது என்றும் அண்டை நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் பாபா வாங்கா பாலோயர்ஸ் அதிர்ச்சி தகவலைக் கூறுகின்றனர். இதனால் பல வித நோய்ப் பாதிப்புகளும் ஏற்படுமாம். அவர் உண்மையாக அப்படியொரு கணிப்பைச் செய்தாரா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஏனென்றால் கடந்த காலங்களிலும் பல முறை இதுபோல பாபா வாங்கா கணிப்புகள் என இணையத்தில் தகவல் பரவியுள்ளன. அவற்றில் சில கணிப்புகள் போலியாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற கணிப்புகள்: இந்தாண்டிற்காக அவர் மேலும் சில கணிப்புகளையும் செய்துள்ளார். அதாவது காலநிலை மாற்றம் தொடர்ந்து பெரும் பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், 2023இல் சக்திவாய்ந்த சூரிய புயல் ஏற்படும் எனப் பாபா வாங்கா கணித்துள்ளார். மேலும், இந்தாண்டு இறுதிக்குள் பவர்புல் நாடுகளில் ஒன்று பயோ ஆயுதத்தைப் பயன்படுத்தும் என்றும் இதனால் பல ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார். இவை நடக்குமா என்பது இன்னும் கொஞ்சக் காலத்தில் தெரிந்துவிடும்,
பாபா வாங்கா வரும் ஆண்டுகளுக்கும் பல்வேறு கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டிலும் என்ன நடக்கும் என்பது குறித்தும் கணித்துள்ளார். அப்படியே வரும் 5079ஆம் ஆண்டு வரை என்ன நடக்கும் என்பது குறித்து இவர் துல்லியமாகக் கணித்துள்ளார். 5079இல் உலகம் அழியும் என்று இவர் கணித்ததால், அத்துடன் தனது கணிப்பை நிறுத்தினார் என்றும் அவரை பின்தொடர்வோர் கூறுகின்றனர்.
-
டிரம்பிற்கு மரண அடி கொடுத்த நீதிமன்றம்.. H-1B விசா கட்டண உயர்வு ரத்து.. இந்தியர்களுக்கு மிக வெற்றி -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா?












Click it and Unblock the Notifications