"86 47.." இந்த 4 நம்பருக்கும் டிரம்ப் கொலை முயற்சிக்கும் தொடர்பு? வசமாக சிக்கும் FBI மாஜி தலைவர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராகக் கொலை முயற்சி மற்றும் வன்முறையைத் தூண்டியதாகச் சொல்லி முன்னாள் எஃப்.பி.ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமி இப்போது விசாரணையை எதிர்கொண்டுள்ளார். யார் இந்த ஜேம்ஸ் கோமி.. இவர் எதற்காக இப்போது இப்படியொரு சிக்கலில் மாட்டியிருக்கிறார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

அமெரிக்காவில் கடந்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை டிரம்ப் வீழ்த்தியது அனைவருக்கும் தெரியும். கமலா ஹாரிஸ் முதலில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது, அவரை விட டிரம்ப் ஆதரவு குறைவாகவே இருந்தது.

What is Ex-FBI Director Comey s 86 47 Post that gave him huge trouble

டொனால்ட் டிரம்ப்

அந்தச் சூழலில் பென்சில்வேனியாவில் டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயற்சி நடந்தது. இதுதான் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் கேம் சேஞ்சராக இருந்தது. அதன் பிறகே டிரம்ப்பின் ஆதரவு பல மடங்கு அதிகரித்தது. இது ஒரு பக்கம் இருக்க முன்னாள் எஃப்.பி.ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமி தெரியாமல் ஒரு போட்டோவை பகிர்ந்து இப்போது பிரச்சினையில் சிக்கியுள்ளார்.

அதாவது நேற்றைய தினம் அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்திருந்தார்.. கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த போது இதைப் பார்த்தேன் அழகாக இருந்தது எனச் சொல்லி ஒரு போட்டோவை பகிர்ந்திருந்தார். அதில் கடல் ஓடுகளை வைத்து "86 47" என்று எழுதப்பட்டு இருந்தது. அது பார்க்க அழகாக இருப்பதாக அவர் போஸ்ட் செய்திருந்தார்.

வம்பில் மாட்டிய டிரம்ப்

ஆனால், இந்த போஸ்ட் தான் இப்போது அவரை பெரிய வம்பில் மாட்டிவிட்டுள்ளது. ஏனென்றால் அமெரிக்காவில் 86 என்ற நம்பருக்கு வெளியேற்று அல்லது நீக்கு என்று அர்த்தமாகும். இதைக் கொலை என்பதற்கு கோட்டாகவும் பயன்படுத்துவார்கள். அடுத்து 47 என்பது டிரம்பை குறிக்கிறது. ஏனென்றால், அவர் தான் 47ஆவது அமெரிக்க அதிபராக இப்போது பதவியேற்றிருக்கிறார். எனவே, டிரம்பை கொலை செய்ய வேண்டும் என்பதையே ஜேம்ஸ் கோமி சொல்ல வருகிறார் என்றும் அவர் வன்முறையைத் தூண்டுகிறார் என்றும் டிரம்ப் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர்.

இதையடுத்து கோமி தனது இன்ஸ்ட்கிராம் பதிவை நீக்கிவிட்டார். மேலும், அது பார்க்க அழகாக இருந்தது என்பதாலேயே போட்டோவாக எடுத்து பதிவிட்டதாகவும் அதில் வன்முறை உடன் தொடர்புடைய எண்கள் இருப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் விளக்கமளித்தார். ஆனாலும், கோமியின் விளக்கத்தை டிரம்ப் ஆதரவாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

What is Ex-FBI Director Comey s 86 47 Post that gave him huge trouble

யார் இந்த ஜேம்ஸ் கோமி

ஏனென்றால் இந்த கோமியை டிஸ்மிஸ் செய்தவரே டிரம்ப் தான். கடந்த 2013ல் ஒபாமா அதிபராக இருந்த போது ஜேம்ஸ் கோமி எஃப்.பி.ஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார். 2017ல் டிரம்ப் அதிபரான நிலையில், சில மாதங்களிலேயே ஜேம்ஸ் கோமியை டிஸ்மிஸ் செய்தார். அந்த கோபத்தை மனதில் வைத்தே டிரம்பிற்கு கொலை மிரட்டலை விடுத்தாக டிரம்ப் ஆதரவாளர்கள் கூறினர்.

இது அமெரிக்காவில் மிகப் பெரிய விஷயமாகப் பூதாகரமாக வெடிக்கவே இப்போது ஜேம்ஸ் கோமி மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. எஃப்.பி.ஐ அமைப்பு, உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு, சீக்ரெட் சர்வீஸ் என மூன்று தரப்பினரும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பின்னணி

கடந்தாண்டு ஜூலை மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து. வந்தது. அப்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் பென்சில்வேனியாவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயற்சிகள் நடைபெற்றது. அங்கு அவர் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டு இருக்கும்போது தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்பவர் அவரை சுட்டுக் கொல்ல முயன்றார்.

இருப்பினும், அந்த துப்பாக்கிக் குண்டு டிரம்பின் காதை மட்டும் உரசிச் சென்றது. இதன் மூலம் அவர் நூலிழையில் உயிர் தப்பினார். ரத்தம் சொட்டச் சொட்ட, அமெரிக்கத் தேசிய கொடிக்கு முன்பு டிரம்ப் கையை உயர்த்தி காட்டிய போட்டோ தான் அவரது பிரச்சாரத்தைப் புரட்டிப்போட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+