"கோஸ்ட் ஜாப்ஸ்.." இளைஞர்களுக்கு வரும் புது ஆப்பு.. கொரோனாவுக்கும் இதற்கும் உள்ள தொடர்பு தெரியுமா
வாஷிங்டன்: உலகெங்கும் இப்போது புதிதாக கோஸ்ட் ஜாப்ஸ் என்று ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த கோஸ்ட் ஜாப்ஸ் என்றால் உண்மையில் என்ன.. இதற்கும் கொரோனா பெருந்தொற்றுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்துப் பார்க்கலாம்.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இப்போது தான் உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளது. இதற்கிடையே இப்போது கோஸ்ட் ஜாப்ஸ் என்ற ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் இளைஞர்களுக்கு பெரும் திண்டாட்டமாக இருக்கிறதாம்.

உலகில் இப்போது கோஸ்ட் ஜாப்ஸ் ( ghost jobs) என்ற முறை அதிகரித்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் இது பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த வேலைகளுக்கு ஆட்கள் இருப்பதாக அறிவிக்கப்படுவார்கள்.
புது டிரெண்ட்: கோஸ்ட் ஜாப்ஸ் குறித்து தனக்கு நேர்ந்ததை மவுரீன் டபிள்யூ கிளாஃப் என்பவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "இப்போது டெக் துறையில் புதிய சூப்பர் கூல் ட்ரெண்ட் உள்ளது.. அதுதான் கோஸ்ட் ஜாப்ஸ்.. நான் மேனேஜர் பதவியில் ஒருவரை பணியில் அமர்த்த வேண்டி இருந்தது. இதற்காக நான் நேர்காணல் எடுத்துக் கொண்டு இருந்தேன், அப்போது ஒருவர், நமது நிறுவனத்தில் தான் புதிதாக ஆள் எடுப்பதை நிறுத்திவிட்டார்களே என்றார். இதையடுத்து நான் ஹெச்ஆரிடம் சென்றேன், அவரும் அதை உறுதி செய்தார்.
திருமணத்திற்கு பிறகும்.. மற்ற பெண்கள் மீது ஆசைப்படும் 60% இந்தியர்கள்! ஷாக் சர்வே முடிவுகள்
இருப்பினும், மீண்டும் நமக்கு ஆள் தேவைப்படலாம் என்று சொன்ன அவர் தொடர்ந்து நேர்காணல்களை நடத்தச் சொன்னார். ஆனால், எப்போது ஆட்களை எடுப்பார்கள் என்று தெரியாது என்பதால் நான் தொடர்ந்து நேர்காணல் எடுக்க மறுத்துவிட்டேன். எனது நேரத்தையும் நேர்காணலுக்கு வருவோர் நேரத்தையும் வீணடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கோஸ்ட் ஜாப்ஸ்: சரி இப்போது பலருக்கும் கோஸ்ட் ஜாப்ஸ் என்றால் என்ன என்ற சந்தேகம் வரும்.. அது குறித்துப் பார்க்கலாம். கோஸ்ட் ஜாப்ஸ் என்றால் ஒரு நிறுவனம் வேலை காலியாக இருப்பதாக விளம்பரப்படுத்தும். ஆனால் அந்த காலியிடங்களை நிரப்பும் எண்ணம் அவர்களுக்கு இருக்காது. வேறுமன காலியிடம் இருப்பதாகச் சொல்லிவிட்டு நேர்காணல்களை மட்டும் நடத்திக் கொண்டே இருப்பார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
அந்த காலகட்டத்தில் புதிய ஊழியர்களுக்குச் சம்பளம் தர அந்த நிறுவனத்திற்கு பட்ஜெட் இல்லாமல் போகலாம், அல்லது இப்போது நேர்காணலுக்கு வருவோர் எந்தளவுக்கு இருக்கிறார்கள் என்பதை மதிப்பிடுவது மற்றொரு காரணமாக இருக்கலாம். அல்லது வரும் காலத்தில் தேவைப்படும் பதவிக்காக இப்போதே அறிவிப்பை வெளியிட்டு நேர்காணல்களைத் தொடர்ந்து நடத்தலாம். இப்போது பல காரணங்களால் நிறுவனங்கள் இதுபோல செய்து வருகிறதாம்.
கொரோனாவுக்கு உள்ள தொடர்பு: கொரோனா காரணமாகப் பொருளாதார மந்தநிலை பல நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலையில், அதுவும் நிறுவனங்கள் ஆள் எடுப்பதை நிறுத்தி வைக்க முக்கிய காரணமாக இருக்கலாம். இதுவே கோஸ்ட் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க மற்றொரு காரணமாக இருக்கிறது. சரி ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு உண்மை தானா.. இல்லை இதுபோல கோஸ்ட் அறிவிப்பா என்பதை எப்படிக் கண்டறிவது என்ற கேள்வி வரலாம். அதற்கான பதிலைப் பார்க்கலாம்.
உண்மையான வேலைவாய்ப்பு அறிவிப்பு என்பதில் எப்போதும் தகுதி, அதில் நமக்கு என்ன தேவை, அவர்கள் எதிர்பார்ப்பு என்ன ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டு இருக்கும். வேலைவாய்ப்பு அறிவிப்பில் கூடுதல் தகவல் எதுவும் இல்லை என்றால் அது கோஸ்ட் ஜாப் என்றே கருதப்படும். எனவே, இதை வைத்து ஒருவர் அது உண்மையான வேலைவாய்ப்பு அறிவிப்பா இல்லை போலி அறிவிப்பா என்பதைக் கண்டறியலாம்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications