பூமியை மொத்தமாக அழிக்கும் "கிலோனோவா.." அடுத்த 100 ஆண்டுக்கு புல் பூண்டு கூட விளையாது! பகீர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்த பிரபஞ்சத்தில் எந்த நிகழ்வு நடந்தால் அது இந்த பூமியை அழிக்கும் என்பது குறித்து புதிய ஆய்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.

இந்த பிரபஞ்சம் என்பது பல மர்மங்கள் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. இங்கே பல கேள்விகளும் இருக்கிறது. இதில் நாம் ஒரு கேள்விக்கு விடையைக் கண்டுபிடித்தால் புதிதாக 10 கேள்விகள் உருவாகும். அந்தளவுக்குச் சிக்கலான ஒன்றாகப் பிரபஞ்சம் இருக்கிறது.

 What is Kilnova Space Explosion that Could End the entire Life On Earth

இதற்கிடையே பிரபஞ்சம் குறித்த ஆய்வை நடத்தி வரும் ஆய்வாளர்கள் பூமி எப்படி அழிய வாய்ப்பு இருக்கிறது.. இதனால் எந்தளவுக்கு ஒரு ஆபத்தான சூழல் உருவாகும் என்பது குறித்து சில பரபர தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.

பூமி அழியும்: அதன்படி நடத்தப்பட்ட புதிய ஆய்வில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நியூட்ரான் நட்சத்திரம் மோதும் நிகழ்வு எவ்வளவு அருகில் நடந்தால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழியும் அபாயம் ஏற்படும் என்பது குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளது. இந்த நிகழ்வை ஆய்வாளர்கள் கிலோனோவா என்று அழைக்கிறார்கள். பிரபஞ்சத்தில் ஏற்படும் மிகவும் சக்திவாய்ந்த வெடி நிகழ்வாக இதை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இந்த கிலோனோவா நிகழ்வு காமா கதிர்கள், காஸ்மிக் கதிர்கள் மற்றும் எக்ஸ்-கதிர்கள் போன்ற கொடிய கதிர்வீச்சுகளை வெளியிடுவதால், அது நமது ஒட்டுமொத்த கிரகத்திற்கும் ஆபத்தான ஒன்றாக மாறுகிறது.

எவ்வளவு தொலைவு: இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கும் இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஹெயில் பெர்கின்ஸ் கூறுகையில், "பூமியில் இருந்து சுமார் 36 ஒளி ஆண்டுகள் தொலைவில் நியூட்ரான் நட்சத்திர வெடிப்பு ஏற்பட்டாலும் கூட அதனால் ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளால் ஒட்டுமொத்தமாகப் பூமியில் இருக்கும் அனைத்து உயிரினங்கள் அழிந்துவிடும்" என்றார்.

பொதுவாக விண்வெளியில் தூரத்தை ஒளி ஆண்டுக் கணக்கில் தான் கணக்கிடுவார்கள். அதாவது ஒளியின் வேகத்தில் நாம் என்றால அந்த இடத்தை அடைய எத்தனை காலம் ஆகும் என்பதை வைத்துக் கணக்கிடப்படுவதே ஒளி ஆண்டாகும். அதாவது சூரியினில் இருந்த வரும் ஒளி பூமியை 8.20 நிமிடங்களில் அடைந்துவிடுகிறது. இதே வேகத்தில் நாம் 36 ஆண்டுகள் சென்றால் வரும் இடத்தில் இந்த கிலோனோவா நிகழ்ந்தாலும் கூட ஒட்டுமொத்தமாகப் பூமி அழிந்துவிடும்.

கிலோனோவா என்றால் என்ன: அதிக அடர்த்தியான நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதும் போது வெளியாகும் கதிர்கள் ஓசோன் படலத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும். இதனால் நமது பூமியில் அடுத்த 1,000 ஆண்டுகளுக்குப் புற ஊதா கதிர்வீச்சால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது. அப்படி வெளியாகும் அனைத்து ஆபத்தான துகள்களையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததில், காஸ்மிக் கதிர்கள் தான் மிகவும் ஆபத்தாக உள்ளதாகக் கூறுகிறார்கள்.

விண்வெளியில் இப்படி இரண்டு அதிக அடர்த்தியான கிரகங்கள் மோதும் போது அங்கே காஸ்மிக் கதிர் உருவாகும். அது தனது பாதையில் உள்ள அனைத்தையும் சூழ்ந்து அதிக ஆற்றல்மிக்க, சார்ஜ் செய்யப்பட்ட துகள்களை ரிலீஸ் செய்து பூமியை அழிக்கும். அப்படி இது பூமியைத் தாக்கினால் அதன் பாதிப்பு மிக மோசமாக இருக்கும்.

ரொம்பவே ஆபத்து: இதை விட மற்றொரு ஆபத்தும் இருக்கிறது. அதாவது இரு கிரகங்கள் மோதும் போது காமா கதிர்களும் வெளியாகும். அது காஸ்மிக் கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்பைக் காட்டிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், அதற்குப் பூமி இந்த கிலோனோவா நிகழ்வு நடக்கும் இடத்தில் இருந்து 16 ஒளி ஆண்டுகள் தொலைவிற்குள் இருக்க வேண்டும். அதேநேரம் இந்த கிலோனோவா நிகழ்வு ரொம்பவே அரிதான நிகழ்வு என்பதால் இது குறித்துக் கவலைகொள்ளத் தேவையில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் சம்பவங்கள் எப்படி பூமியைப் பாதிக்கும் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இதுபோன்ற நிகழ்வுகளில் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு அதிகபட்ச எனர்ஜி வெளியாகும். அவை அணு வெடிப்பில் இருந்து உருவாகும் ஆற்றலைக் காட்டிலும் பல மடங்கு வலிமையானதாக இருக்கும். இதன் காரணமாகவே அவை பூமியையே அழிக்கும் அபாயம் ஏற்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+