டிரம்பின் முதல் கையெழுத்து என்ன தெரியுமா? ஜோ பைடனின் 78 நடவடிக்கைகள் அதிரடி ரத்து.. இதோ லிஸ்ட்
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47வது அதிபராக குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் நேற்று பதவியேற்றார். அடுத்த ஒரு மணிநேரத்தில் அவர் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டார். இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்பின் முதல் கையெழுத்து குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாளிலேயே ஜோ பைடன் அதிபராக இருந்தபோது மேற்கொண்ட 78 நடவடிக்கைகளை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அதேபோல் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார். இதில் கமலா ஹாரிசை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.

இதையடுத்து டொனால்ட் டிரம்ப் நேற்று முறைப்படி அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றார். டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்பது இது 2வது முறையாகும். ஏற்கனவே 2016 முதல் 2020ம் ஆண்டு வரை அவர் அதிபராக செயல்பட்டார். அதன்பிறகு இப்போது மீண்டும் அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார்.
டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழா நேற்று அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் கேபிடல் கட்டிடத்தில் உள்ள ரோட்டுண்டா அரங்கில் நடைபெற்றது. அதிபராக டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபராக ஜேடி வான்ஸ் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். நம் நாட்டின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விழாவில் பங்கேற்றார். டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பதவியேற்பு விழாவை தொடர்ந்து அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி முன்னாள் அதிபர் ஜோபைடன் ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட 78 நடவடிக்கைகளை ரத்து செய்வது தான் டொனால்ட் டிரம்ப் முதல் கையெழுத்தாக அமைந்துள்ளது.
அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்குவது தான். அதேபோல் அமெரிக்காவில் ஆண்கள், பெண்கள் என்ற பாலினம் தான் உண்டு. LGBT பாலின கொள்கையை அவர் புறம் தள்ளி உள்ளார். அதோடு பாஸ்போர்ட்டில் ஆண்கள், பெண்கள் என்று மட்டுமே பாலினம் வகைப்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவு போடப்பட்டுள்ளது.
அதேபோல் தெளிவான புரிதல் வரும்படி அனைத்து ராணுவம் உள்ளிட்ட சில பிரிவுகளை தவிர்த்து பிற அனைத்து துறைகளிலும் பணி நியமனம் செய்வது முடக்கம் செய்யப்படும். அமெரிக்காவில் மக்களின் வாழ்க்கைக்கான பண செலவு குறித்த விவகாரத்தில் நெருக்கடி நிலை உள்ளது. இதனை நிவர்த்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் நாட்டில் பேச்சு சுதந்திரத்தை மீட்டெடுக்கவும், வரும்காலத்தில் பேச்சு சுதந்திரத்தை தணிக்கை செய்யவும் நடவடிக்கை என்பது எடுக்கப்படும். அதேபோல் முந்தைய அரசு போல் காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுவதை முடிவுக்கு கொண்டு வரும் உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். இந்த கையெழுத்திடும்போது ஒவ்வொரு ஆவணங்களையும் அவர் விழாவில் கூடியிருந்த மக்களிடம் எடுத்து காண்பித்தார். அதோடு தான் கையெழுத்திட்ட பேனாக்களை மக்களை நோக்கி வீசினார்.












Click it and Unblock the Notifications