உலகின் மிக பெரிய சைபர் தாக்குதல்? முடங்கிய அமெரிக்கா! தரையிறக்கப்பட்ட விமானங்கள்.. பரபர விளக்கம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்றைய தினம் சுமார் 90 நிமிடங்கள் விமானச் சேவை ஒட்டுமொத்தமாக அப்படியே முடங்கியது. இதனிடையே இந்த நிகழ்வுக்கு சைபர் தாக்குதல் காரணமாக என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இப்போது அடுத்தடுத்து பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. முதலில் அமெரிக்காவில் கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில் கிழக்கு மாகாணங்களில் சூறாவளி பாம்ப் ஏற்பட்டது.
அதன் பிறகு கலிபோர்னியாவில் மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து புயல் ஏற்பட்டது.. இதனால் அங்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இது போதாதென்று இப்போது மற்றொரு தலைவலியும் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.

முடங்கிய அமெரிக்கா
அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று திடீரென தொழில்நுட்ப ரீதியாக மிகப் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. நேற்று அங்கு திடீரென கிட்டதட்ட அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டன. பொதுவான ஏதாவது விமானம் கடத்தப்பட்டால் தான் இதுபோன அனைத்து விமானங்களும் தரையிறக்கப்படும். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அதன் பின்னரே தொழினுட்ப சிக்கல் காரணமாக விமானங்கள் தரையிறக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சில மணி நேரத்தில் அங்கு விமானச் சேவை மீண்டும் படிப்படியாக வழக்கம் போல இயங்க தொடங்கியது.

சைபர் தாக்குதல்?
அங்குள்ள சிலர் இது சைபர் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகம் கிளப்பினர். ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளுடன் அமெரிக்காவுக்குச் சுமுகமான உறவு இல்லை. இதனால், அந்த நாடுகளைச் சேர்ந்த ஹேக்கர்கள் அமெரிக்கா மீது சைபர் தாக்குதலை நடத்தியிருப்பார்களோ என்று சிலர் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டனர். இருப்பினும், இந்தத் தகவலை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முற்றிலுமாக மறுத்துள்ளது. இந்த தொழில்நுட்ப கோளாறு என்ன காரணம் என்பது குறித்துக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் இல்லை?
இது குறித்து வெள்ளை மாளிகையின் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், "இப்போது சைபர் தாக்குதலுக்கு எந்த ஆதாரமும் இல்லை. காரணங்கள் குறித்து முழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து அதிபர் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார். இது நமக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான ஒன்று.. அமெரிக்கர்களின் பாதுகாப்பு தான் முக்கியமானது. அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அதுதான் அதிபரின் நோக்கம்.. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

சுமார் 10 ஆயிரம் விமானங்கள்
அமெரிக்காவில் நேற்று மட்டும் 9,600 விமானங்கள் தாமதமாகின.. அதேபோல 1,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர், விமானங்கள் இந்தளவுக்குத் தரையிறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.. மீண்டும் பறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், இன்னுமே கூட பல விமானங்கள் தாமதமாகியும் ரத்து செய்யப்பட்டும் வருகிறது. இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு விமானச் சேவை மீண்டும் வழக்கம் போல இயங்க சில நாட்கள் வரை ஆகும் என்றே வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிபர் பைடன்
இந்த பிரச்சினைக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட பைடன், இது சைபர் தாக்குதலா என்று இப்போதைக்குத் தெரியவில்லை என்றார். மேலும், இதற்கான காரணங்கள் தெரியவில்லை என்று சொன்ன பைடன், விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் இல்லை என்றும் கிளம்புவதில் தான் சிக்கல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணை
அமெரிக்க விமான துறை ரெகுலேட்டரான எஃப்ஏஏ அதிகாரிகளும் இதே கருத்தை எதிரொலித்தனர். அவர்களும் சைபர் தாக்குதலுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று திட்டவட்டமாக கூறினர். முதற்கட்ட விசாரணையில் சேதமடைந்த டேட்டா பேஸ் காரணமாகவே இந்த பெரிய சைபர் தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுவாக இதுபோன்ற பெரிய நெட்வோர்க்குகளில் எதிர்பாராத சமயங்களில் உதவ பேக்அப் வைக்கப்படும். ஆனால், நேற்றைய தினம், மெயின் சர்வர் மட்டுமில்லாமல் பேக்அப் சர்வரிலும் பிரச்சினை ஏற்பட்டது. இதுவே சுமார் 90 நிமிடங்கள் விமானங்கள் முற்றிலுமாக முடங்க காரணமாக அமைந்தது.
-
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications