Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நிர்வாணமாகவே பார்த்திருக்கேன்.. அவர் என்ன செய்ய போறார்.." டிரம்பை பொளந்து எடுத்த ஆபாச பட நடிகை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபராக இருந்த டிரம்ப் ஆபாச அழகிக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ளார். இதனிடையே இந்த விவகாரம் குறித்து அடல்ட் நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், 2016இல் செய்த ஒரு காரியம் இப்போது அவரை பெரிய சிக்கலில் மாட்டி விட்டது. அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சிறைக்குச் செல்ல வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

டிரம்ப் கடந்த காலங்களில் மிகப் பெரிய ஒரு ப்ளே பாயாகவே இருந்துள்ளார். திருமணத்திற்கு முன்பு, அவர் பல்வேறு பெண்களுடன் உறவில் இருந்ததாக பல செய்திகள் வெளியாகியுள்ளன.

 சிக்கிய டிரம்ப்

சிக்கிய டிரம்ப்

2016இல் அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. டிரம்ப் 2016 தேர்தல் ஆண்டில் தன்னை பற்றி டேமேஜ் செய்யும் நியூஸ்கள் எதுவும் வராமல் பார்த்துக் கொண்டார். அப்போது ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸிடம் தன்னுடன் உறவில் இருந்தது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்று டிரம்ப் தரப்பு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்காக 1.30 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி) கொடுத்துள்ளனர். இப்படிப் பணம் கொடுத்தது ஒப்பந்தம் போடுவது விதிமீறல் இல்லை என்றாலும்,அந்த பணம் டிரம்ப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டது.

 ஜெயில்தான்

ஜெயில்தான்

நியூயார்க் சட்டப்படி இதுபோல நிதி முறைகேடு பெலனி குற்றமாகக் கருதப்படும். இதில் அப்போது டிரம்ப் தரப்பில் ஒப்பந்தம் போட்ட வழக்கறிஞரும் அவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார். இதில் தான் டிரம்ப் தவறு செய்துள்ளதாக ஜூரே தெரிவித்துள்ளது. பெலானி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டிரம்ப், வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒருவர் இதுபோன்ற குற்றச்சாட்டில் சிக்குவது இதுவே முதல்முறையாகும்.

 நிர்வாணமாகப் பார்த்துள்ளேன்

நிர்வாணமாகப் பார்த்துள்ளேன்

இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து அடல்ட் நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அங்குள்ள ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ், தான் டிரம்பை கண்டு துளியும் அஞ்சவில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "நான் அவரை நிர்வாணமாகப் பார்த்துள்ளேன். இப்போது ஆடைகளுடன் அவரெல்லாம் என்னை அச்சுறுத்த வழியே இல்லை. அவருக்கு எதிராகச் சாட்சி கூறுவதிலும் எனக்கு எந்தவொரு பயமும் இல்லை.

 அப்போ தப்பிவிட்டார்

அப்போ தப்பிவிட்டார்

ஏற்கனவே, அமெரிக்க கேபிடல் தாக்குதல் விவகாரத்தில் அவர் கலவரத்தைத் தூண்டிவிட்டு, மரணத்தை ஏற்படுத்தியதற்காக அவர் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் இருந்து அவர் தப்பிவிட்டார். இந்த விவகாரத்தில் முடிவு எதுவாக இருந்தாலும், அதை வைத்தும் நிச்சயம் அவர் அரசியல் செய்வார். வன்முறையை ஏற்படுத்தப் போகிறார்.. இதனால் காயங்களும் மரணமும் கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதில் சில நன்மைகள் இருந்தாலும், பெரும்பாலும் வன்முறைச் சம்பவங்கள் நடக்கவே வாய்ப்புகள் அதிகம்..

 தண்டிக்கப்பட வேண்டும்

தண்டிக்கப்பட வேண்டும்

டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை நான் வெளிப்படையாகச் சொன்ன பிறகு, பல பிரச்சினைகளைச் சந்தித்தேன். ஏன் இதைப் பொதுவெளியில் சொன்னோம் என்றெல்லாம் யோசித்து இருக்கிறேன். ஆனால், டிரம்ப் இதைவிட எல்லாம் மிக மோசமான செயல்களைச் செய்துள்ளார். அவர் முன்பே அகற்றப்பட்டிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நான் ஒரு ஆபாசப் பட நடிகை என்பதால் எப்படி அணுகுகிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால், அவரை தண்டிக்காமல் விட்டுவிடக் கூடாது" என்று அவர் தெரிவித்தார்.

 சட்டத்திற்கு மேல் யாருமில்லை

சட்டத்திற்கு மேல் யாருமில்லை

முன்னதாக டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என்ற அறிவிப்பு வந்த போது, ஸ்டோர்மி டேனியல்ஸின் வழக்கறிஞர் கிளார்க் ப்ரூஸ்டர், "டொனால்ட் டிரம்ப் மீதான குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். ஜூரிகளின் கடின உழைப்பும் மனசாட்சியும் மதிக்கப்பட வேண்டும். இப்போது உண்மையும் நீதியும் வெல்லட்டும். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை" என்று பதிவிட்டிருந்தார்.

 அதிபர் தேர்தல்

அதிபர் தேர்தல்

இருப்பினும், இந்த தீர்ப்பு டிரம்பை 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை எந்த விதத்திலும் தடை செய்யவில்லை. இதனால் 2024 அதிபர் தேர்தலில் அவரால் வழக்கம் போலக் களமிறங்க முடியும். அமெரிக்காவில் சிறை சென்றாலும் கூட சிறையில் இருந்து போட்டியிட முடியும். ஏற்கனவே கடந்த காலங்களில் சிலர் ஜெயிலில் இருந்தபடி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+