புதிய தலைவலி! உருமாறிய 'XE' கொரோனா.. மிக வேகமாக பரவுதாம்! அடுத்த அலையை ஏற்படுத்துமா? WHO வார்னிங்
வாஷிங்டன்: சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், புதிய உருமாறிய கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பின்னர், உலகின் அனைத்து நாடுகளையும் கொரோனா வைரஸ் அலறவிட்டது.
கொரோனா வேக்சின் பணிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை காரணமாக வைரஸ் பாதிப்பு மெல்லக் குறையத் தொடங்கியது. இதனால் உலகின் பல நாடுகள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரசை இதுவரை எந்தவொரு நாடும் முழுமையாக அழிக்கவில்லை. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருப்பதே அதற்கு முக்கிய காரணமாக உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா முதல் அலையை ஏற்படுத்தியது என்றால், அதன் பின்னர் ஆல்பா, டெல்டா மற்றும் ஓமிக்ரான் ஆகிய உருமாறிய கொரோனா வகைகள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தின. குறிப்பாக வேக்சின் தடுப்பாற்றாலும் புதிய உருமாறிய கொரோனாவுக்கு எதிராக குறைந்ததால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.

ஓமிக்ரான்
கடைசி அலையை ஏற்படுத்திய ஓமிக்ரான் கொரோனா பெரும்பாலும் லேசான பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே இருந்தது. இதனால் அதிகப்படியான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போதிலும், தீவிர பாதிப்பும் உயிரிழப்பும் குறைவாகவே இருந்தது. இந்தச் சூழலில் உலக சுகாதார அமைப்பு XE என்ற புதிய வகை கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஒமிக்ரான் BA.2 வகையை விட சுமார் பத்து சதவீதம் வேகமாகப் பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதற்கு முன்பு வரை, ஓமிக்ரான் BA.2 கொரோனா தான் மிக வேகமாகப் பரவும் கொரோனா வகையாக இருந்தது.

புதிய XE உருமாறிய கொரோனா
இந்த புதிய XE உருமாறிய கொரோனா என்பது BA.1 மற்றும் BA.2 ஆகிய இரண்டு உருமாறிய கொரோனாவின் ஹைபிரிட் வேரியண்ட் ஆகும். இருப்பினும், நல்வாய்ப்பாக இப்போது இந்த உருமாறிய கொரோனா உலக அளவில் மிக குறைவான நபர்களுக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு, "XE உருமாறிய கொரோனா (BA.1-BA.2), கடந்த ஜனவரி 19இல் இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது, இதுவரை 600 பேருக்கு மட்டுமே இந்த புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வேகமாக பரவும்
மேலும். இந்தப் புதிய கொரோனா 10 சதவிகிதம் வரை வேகமாகப் பரவும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.. XE வேரியண்ட்டின் தீவிரத் தன்மையில் பெரியளவில் மாறுபாடு இல்லை என்றும் இப்போது வரை இதை ஓமிக்ரான் கொரோனாவின் ஒரு வகை பிறழ்வு என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உருமாறிய கொரோனா
சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா உலகெங்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர், பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்ட ஆல்பா கொரோனா உலகெங்கும் பரவியது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. கடைசியாகத் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் நாட்டில் 3ஆவது அலையை ஏற்படுத்தியது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications