மொபைலை சார்ஜ் போட்டாலே வங்கியில் ஒரு பைசா கூட இருக்காது! FBI பரபர வார்னிங்..இதை மட்டும் செய்யாதீங்க

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பொதுமக்கள் பலரும் பொது இடங்களில் சார்ஜிங் வசதியைப் பயன்படுத்துவது அதிகரித்து வரும் நிலையில், இதில் பெரிய ஆபத்து புதைந்திருப்பதாக எஃப்.பி.ஐ எச்சரித்துள்ளது.

மொபைல் போன்களின் பயன்பாடு இப்போது பல மடங்கு அதிகரித்துவிட்டது. பேசுவதற்கு மட்டுமே என்று இருந்த நிலை மாறி, இப்போது A டூ Z வரை அனைத்துமே மொபைல் மூலம் செய்ய முடிகிறது.

சாட்டிங் முதல் டேட்டிங் வரை இப்போது எல்லாமே மொபைல் வசமாக மாறிவிட்டது. மொபைல் போனால் இல்லாமல் வெளியே செல்வதை இப்போது யாராலும் யோசிக்கக் கூட முடியாது.

Why FBI Says Don’t Charge Your Phone At Public Charging Points

வெளியே செல்லும் போது மொபைல் போன் சார்ஜ் எல்லாம் காலியானாலே அவ்வளவு தான். பலருக்கும் கிட்டதட்ட ஹார்ட் அட்டகே வந்துவிடும்.. பதற்றமாகிவிடுவோம்.. அந்தளவுக்கு மொபைல் மீது நாம் சார்ந்திருக்கத் தொடங்கிவிட்டோம்.

சார்ஜிங் ஸ்டேஷன்கள்: இதனால் பொதுமக்களுக்கு உதவ ஏதுவாக பொது இடங்களில் சார்ஜிங் வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் பலரும் இப்படி பொது இடங்களில் சார்ஜிங் வசதியைப் பயன்படுத்துவது அதிகரித்தே வருகிறது. இருப்பினும், இப்படி பொது இடங்களில் சார்ஜர்கள் மூலம் உங்கள் ஃபோன்களை சார்ஜ் செய்வது பெரிய ஆபத்து என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.

அதுவும் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அமைப்பே இது குறித்து எச்சரிக்கையை விடுத்துள்ளது. பொது இடங்களில் மற்றவர்களின் சார்ஜர்கள் இருந்தால், அங்கே சார்ஜ் செய்ய வேண்டாம் என்று எஃப்.பி.ஐ அமைப்பு எச்சரித்துள்ளது. இப்போதெல்லாம் பொது இடங்களில் இருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் ஹேக்கர்களின் சொர்க்கமாக மாறிவிட்டதாக எச்சரித்துள்ளது. சார்ஜிங் ஸ்டேஷன்கள் மால்வேர்களின் புகலிடமாக மாறிவிட்டதாகவும் எச்சரித்துள்ளனர்.

ஹேக்கிங் ஆபத்து: இதில் இருந்து நமது ரகசியத் தரவுகளைத் திருட முடியும். அவ்வளவு ஏன் உங்கள் பணத்தையும் கூட திருட முடியும் என்று எச்சரித்துள்ளனர். இதை ஆய்வாளர்கள் ஜூஸ் ஜாக்கிங் என்றும் அழைக்கிறார்கள். இதில் ஹேக்கர்கள் சார்ஜிங் சாதனங்கள் மூலம் நமது மொபைல்களில் மால்வேர்களை அனுப்பி விடுகிறார்கள். இதில் இருக்கும் டிரிக் ரொமம்பவே ஈஸி. ஏனென்றால், பெரும்பாலும் இதுபோன்ற இடங்களில் நாம் சந்தேகப்படவே மாட்டோம்.

Why FBI Says Don’t Charge Your Phone At Public Charging Points

இதன் காரணமாகவே அவர்கள் பொது இடங்களில் இருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன்களை பயன்படுத்துகிறார்கள். அங்கேயே சார்ஜர்கள் இருக்கிறது என்பதற்காக அதைப் பயன்படுத்தினால் மிக எளிதாக நீங்கள் சார்ஜ் போடும் போது உங்கள் மொபைலை ஹேக் செய்துவிடுவார்கள். சமீப காலங்களாக வெளிநாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் பல மடங்கு அதிகரித்துவிட்டதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜூஸ் ஜாக்கிங்: இதன் காரணமாகவே எஃப்.பி.ஐ அமைப்பும் கூட இது குறித்து எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. எனவே, பொது இடத்தில் சார்ஜிங் போடும் போது கூடுமான அளவுக்குக் கவனமாக இருக்க வேண்டும். ஜூஸ் ஜாக்கிங் பயனர்களைத் தாக்கும் எளிதான வழியாகும்.. ஏனெனில் மக்கள் எப்போதும் தங்கள் மொபைலுக்கு சார்ஜ் செய்தாக வேண்டும்.. குறிப்பாக அவர்கள் வெளியே சுற்றுலா போலச் செல்லும் போது சார்ஜ் ரொம்பவே முக்கியம். அதுபோன்ற நேரங்களில் இந்த மொபைல் சார்ஜிங் இடங்கள் முக்கியமாக வருகிறது.

Why FBI Says Don’t Charge Your Phone At Public Charging Points

எப்படித் தவிர்க்கலாம்: அடாப்டரை நாம் மறந்து வைத்து விட்டு வந்தாலோ.. அல்லது உள்ளே லக்கேஜில் எங்கோ இருக்கிறது என நினைத்து நாம் அங்கே இருக்கும் சார்ஜர்களை பயன்படுத்தினால் இதுதான் ஆபத்து இந்த வகையான ஹேக்கிங்கிற்கு இரையாவதைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, கேபிள் உட்பட உங்கள் முழு சார்ஜரை எங்குச் சென்றாலும் எடுத்துச் செல்லுங்கள். சார்ஜ் செய்வதற்காக மொபைலுடன் இணைக்கப்பட்ட USB கேபிள் வழியாகத் தான் வைரஸ் உங்கள் சாதனத்தைத் தாக்கும். இதனால் எச்சரிக்கையாக இருங்கள். ஜூஸ் ஜாக்கிங்கில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்

அடுத்த முறை வெளியே செல்லும் போது இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களில் சார்ஜ் செய்ய நீங்கள் யோசித்தால் உலகின் தலைசிறந்த அமைப்பான எப்பிஐ கொடுத்த வார்னிங்கை நினைத்துப் பாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+