Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளின் காதலனால் கருவுற்ற தாய்.. 16 வருஷமாக உலுக்கி எடுக்கும் நிம்மதியின்மை! இப்படி கூடவா நடக்கும்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: தனது மகளின் காதலனால் தான் கருவுற்ற சம்பவத்தை ரெட்டிட் சோஷியல் மீடியாவில் பெண் ஒருவர் பகிர்ந்திருக்கிறார். பெயர், எந்த நாடு? என்பதை குறிப்பிடாமல் இந்த பதிவு இருக்கிறது.

போதை பழக்கத்திற்கு அடிமையானதால் இதுபோன்ற நெருக்கடியை எதிர்கொண்டதாகவும், இந்த சம்பவம் நடந்து 16 ஆண்டுகளுக்கு பின்னரும் கூட தன்னால் இயல்பாக இருக்க முடியவில்லை எனவும் அப்பெண் கூறியிருக்கிறார்.

international health US

இது குறித்து அவர் பகிர்ந்திருந்தாவது, "எனது மகளுக்கு 18 வயது இருந்தபோது, அவள் 24 வயது இளைஞனுடன் டேட்டிங் செய்திருந்தாள். பின்னாட்களில் இருவருக்கும் இடையே வலுவான பிணைப்பு ஏற்பட்டது. ஆனால் எல்லாம் கொஞ்ச காலம்தான். இருவரும் பிரிந்துவிட்டனர். நான் அந்த நேரத்தில் போதைக்கு அடிமையாகியிருந்தேன். குடியும், போதையும் என் கண்ணை மறைத்திருந்தது. மகளை பிரிந்து சென்ற இளைஞன் என்னை நெருங்க தொடங்கினான். வந்தது கோபம்.. கடுமையான வார்த்தைகளை கூறி அவனை விரட்டினேன்.

மீண்டும் வந்தான். ஆனால், இந்த முறை கொகைன் கொண்டு வந்திருந்தான். என்னுடைய போதை அவனுக்கு இடம் கொடுத்தது. உணர்வுகளை கட்டுப்படுத்தி முடிவெடுத்து அவனை விரட்ட முடியவில்லை. போதைக்காக மனம் பதைபதைத்தது. கொகைனை அனுபவிக்க வேண்டும். போதையில் என்னையே மறந்து பறக்க வேண்டும். கொகைன் தரும் உணர்வு நிலையற்ற காலத்தை என் ஆயுள் முழுவதும் நீட்டிக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றியது. போதைக்காக இவனை பயன்படுத்த நினைத்தேன்.

ஆனால், அவன் என்னை பயன்படுத்த தொடங்கினான். இருவரும் சில காலம் வரை ஒன்றாக வாழ்ந்தோம். விளைவு நான் கருவுற்றேன். திடீரென உலகம் முழுவதும் எனக்கு எதிராக திரும்புவதை போல இருந்தது. என் மூச்சுக்காற்றே என்னை எரிப்பதை போல உணர்ந்தேன். என்ன காரியம் செய்திருக்கிறேன் நான்? போதைக்கு அடிமையாகியிருந்தது என்னை எப்படி மாற்றியிருக்கிறது என்பதை அந்த தருணத்தில்தான் உறைத்தது. உடனடியாக குழந்தையை கலைத்துவிட்டேன். போதை பழக்கத்தையும்தான்.

எனக்கு முன்னாள் அவ்வளவு வேலைகள் இருந்தன. ஆனால், எதையும் செய்ய முடியவில்லை. நினைவு இங்கேதான் இருக்கிறதா? என்று என்னை நானே கேட்க தொடங்கினேன். உலகம் எனக்கு மட்டும் பின்னோக்கி சுழன்றது. ஒரு வாரம் என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன். ஜன்னல்களை பூட்டிக்கொண்டேன். கதவுகளை தாழிட்டேன்.

நாட்கள் நகர்ந்தன. மனம் சாந்தமானது. காற்றை தேடியது.. ஜன்னலை திறந்தேன். எனக்கு முன் இவ்வளவு பெரிய உலகம் இருக்கிறதா? இத்தனை நாட்களாக இதை பார்க்கவில்லையே!

அன்று முதல் போதையிடமிருந்து விலகியே இருந்தேன். ஆனால் சில நாட்களில் எனக்கு இன்னொரு சோதனை வந்தது. மகளிடமிருந்து பிரிந்த அவன் மீண்டும் மகளிடமே சேர்ந்துவிட்டான். இப்போது அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. இருந்தாலும் அவனை எதிர்கொள்ளும்போது மனம் பதற்றமடைகிறது. எங்களுக்குள் நடந்ததை அவன் என் மகளிடம் சொல்லவில்லை. ஆனாலும் ஒரு பொய்யை, ஒரு விஷயத்தை எவ்வளவு நாட்கள்தான் மறைக்க முடியும்!

போதை என் வாழ்க்கையின் மிகப்பெரிய வடுவை ஏற்படுத்திவிட்டது!" என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே! போதை உங்கள் வாழ்க்கையை எப்படி பாதித்தது? அதிலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த கருத்துக்களை பகிருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+