"தூங்கச்செல்கிறேன், விழித்ததும் மீண்டும் வேலைக்கு போறேன்" வாரத்துக்கு 120 மணி நேரம் பணி..எலான் மஸ்க்
வாஷிங்டன்: ட்விட்டரை விலைக்கு வாங்கியுள்ள உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், தனது பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை பார்ப்பதாகவும், 'தூங்கச்செல்கிறேன்.. விழித்ததும் மீண்டும் வேலைக்கு போகிறேன்' என்றவாறு பணி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியதும் எலான் மஸ்க் செய்த முதல் நடவடிக்கையே அதன் சி இ ஓவாக இருந்த பராக் அகர்வாலை வீட்டுக்கு அனுப்பியதுதான்.

அடுத்தடுத்த அதிரடிகள்
உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டெஸ்லா, ஸ்பேஸ்க் எக்ஸ், நியூரோ லிங் மற்றும் போரிங் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தக்காராக எலான் மஸ்க் தற்போது ட்விட்டர் நிறுவனத்தையும் வாங்கியிருக்கிறார். 51-வயதான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் தொகைக்கு வாங்கியதில் இருந்தே கடந்த சில வாரங்களாக உலக அளவில் செய்திகளில் அதிகம் அடிபடும் நபராக இருந்து வருகிறார். இதற்கு காரணம் ட்விட்டர் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் இருந்து எலான் மஸ்க் செய்து வரும் அடுத்தடுத்த அதிரடிகளே காரணம்.

‘சிங்க்’ ஒன்றை தூக்கிக் கொண்டு
முதலில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தி இருந்து விலகுவதாக அறிவித்த எலான் மஸ்க், திடீரன மனம் மாறி ட்விட்டரை வாங்க ஒப்புக்கொண்டார். கடந்த வாரம் ட்விட்டர் நிறுவனம் முறைப்படி எலான் மஸ்க் வசம் சென்றது. ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதுமே ‘சிங்க்' ஒன்றை தூக்கிக் கொண்டு ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குள் அதிரடியாக எலான் மஸ்க் நுழைந்தார்.

50 சதவீத பணியாளர்கள் நீக்கம்
அப்போது தொடங்கிய அதிரடிகள் இப்போது வரை முடிந்த பாடில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு எலான் மஸ்க் தினம் தினம் அதிரடி முடிவுகளையும் எடுத்து ட்விட்டர் நிர்வாகத்தையும் அதன் ஊழியர்களை மட்டும் அல்ல.. பயனர்களையும் பரபரப்பாக்கி வருகிறார். ட்விட்டர் நிறுவனத்தின் சி இ ஓவாக இருந்த பாராக் அகர்வாலை நீக்கிய எலான் மஸ்க், 50 சதவீத பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கினார்.

பின் வாங்கப் போவது இல்லை என்று
அதோடு, ட்விட்டரில் புளு டிக் வசதி பெறவேண்டும் என்றால் மாதம் மாதம் கட்டணமக 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 650) செலுத்தியே தீர வேண்டும் என்று விடாப்படியாய் கூறிவருகிறார். எலான் மஸ்க்கின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாது கண்டிப்பாக இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து பின் வாங்கப் போவது இல்லை என்று எலான் மஸ்க் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

பணிச்சுமை உயர்வு
உலகின் முன்னணி பெரும் நிறுவனங்களின் தலைவராக இருக்கும் எலான் மஸ்க் வாரத்திற்கு 120 மணி நேரம் வேலை பார்க்கிறாராம். அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 18 மணி நேரம் வேலை பார்த்து வருவதாக சொல்லியிருக்கிரார். நியூயார்க்கில் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற ஒரு கான்பரன்சில் பேசிய எலான் மஸ்க் இந்த தகவலை வெளியிட்டார். இது தொடர்பாக எலான் மஸ்க் கூறுகையில், ''எனது பணிச்சுமை 70 முதல் 80 மணி நேரத்தில் இருந்து கிட்டத்தட்ட 120 மணி நேரமாக உயர்ந்து விட்டது.

ஏழு நாட்களும் இதைத்தான் செய்கிறேன்
தூங்கச்செல்கிறேன். விழித்ததும் மீண்டும் வேலைக்கு போகிறேன். பிறகு மறுபடியும் தூங்க செல்கிறேன். வாரத்தின் ஏழு நாட்களும் இதைத்தான் செய்கிறேன். தற்போது எனது ஒட்டுமொத்த நேரத்தையும் ட்விட்டருக்காக மட்டுமே செலவிடுகிறேன். ட்விட்டர் சரியான பாதைக்கு திரும்பிய பிறகு எனது மொத்த கவனத்தையும் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனம் மீது செலுத்துவேன்" என்றார்.












Click it and Unblock the Notifications