Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 நாட்களுக்கு பின் உயர்ந்த தங்கம்!! தொடர்ந்து சரியும் வெள்ளி!! இன்றைய விலை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 3 நாட்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது. அதே வேளையில் வெள்ளியின் விலை தொடர்ந்து சரிவிலேயே உள்ளது. உலக சந்தையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களே தங்கம், வெள்ளி விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று ஆபரண தங்கத்தின் விலை வரலாற்று உச்சத்தை எட்டியது. 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 16,800 ரூபாய் என்றும் ஒரு சவரன் 1,30,000 ரூபாய்க்கு மேலும் விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து ஜனவரி 30ஆம் தேதியிலிருந்து அதாவது கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் தங்கத்தின் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. தொடர்ந்து மூன்று வர்த்தக நாட்களாக குறைந்து வந்த தங்கம் இன்றைய தினம் சற்றே கூடியிருக்கிறது.


Gold silver investment

சென்னையில் நேற்று 13,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் இன்று 80 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. ஒரு கிராம் 14,030 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ஒரு சவரன் 640 ரூபாய் விலை கூடி விற்பனையாகிறது. நேற்று 1,11,600 க்கு விற்பனையான தங்கம் இன்று 1, 12,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1, 40,300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் கடந்த 29ஆம் தேதி வரலாற்று உச்சத்தில் தொட்டதிலிருந்து இன்று வரை இன்று வரை தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

ஜனவரி 29 - 1 கிராம் விலை ரூ.16,800

ஜனவரி 30 - 1 கிராம் விலை ரூ. 15,850

ஜனவரி 31 - 1 கிராம் விலை ரூ. 14,900

பிப்ரவரி 1 - 1 கிராம் விலை ரூ. 14,900

பிப்ரவரி 2 - 1 கிராம் விலை ரூ. 13,950

பிப்ரவரி 3 - 1 கிராம் விலை ரூ.14,030

பேர கேட்டாவே சும்மா அதிருதில்ல!! தங்கம், வெள்ளி விலை குறைவுக்கு காரணமான மவராசன் இவர் தான்!!

24 காரட் தங்கம் இன்று விலை கூடி இருக்கிறது. ஒரு கிராம் 88 ரூபாய் விலை உயர்ந்து 15,306 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் 74 ரூபாய் விலை கூடி 1,22,448 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,53,060 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 காரட் தங்கமும் லேசாக விலை ஏறி இருக்கிறது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய் விலை கூடி 12,010 ரூபாய்க்கும் ஒரு சவரன் 80 ரூபாய் விலை கூடி 96,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பரமபதத்துல பாம்பு கொத்துன மாதிரி சரியும் தங்கம், வெள்ளி விலை!! இனி ஏணி வருமா இல்ல பாம்பு தானா?

தங்கத்தின் விலை சற்று அதிகரித்திருந்தாலும் இன்றைய தினம் வெள்ளியின் விலை குறைந்திருக்கிறது. நேற்று 300 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 20 ரூபாய் குறைந்த 280 ரூபாய்க்கும் ஒரு கிலோ 20,000 ரூபாய் சரிந்து 2,80,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கடந்த வியாழன் அன்று ஒரு கிராம் 425 ரூபாய்க்கும் ஒரு கிலோ 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு 145 ரூபாயும் கிலோவுக்கு 1.45 லட்சம் ரூபாயும் சரிந்துள்ளது.

Credit: Goodreturns

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+