15ஆவது ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் கடைசி நாள் நிகழ்வுகள்
15ஆவது ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் நிகழ்ச்சிகள் கடந்த ஒரு 10 நாட்களாக கோலகலமாக நடைபெற்றன. இந்த ஆண்டு, இந்திய மற்றும் உலகம் முழுவதும் இருந்து சுமார் 600 பேச்சாளர்கள், கலைஞர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மொழி, போர், அரசியல், சுற்றுச்சூழல் முதல் பருவநிலை மாற்றம், பாலினப் பிரச்சினைகள், வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வரலாறு, சினிமா, கலை மற்றும் பயணம் உள்ளிட்டவை குறித்த விவாதங்களும் உரையாடல்களும் இதில் இடம்பெற்றன. மேலும், அமர் கோட்டையில் A Majestic Heritage Evening மற்றும் ஜெய்ப்பூர் மியூசிக் ஸ்டேஜ் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்த இலக்கிய விழாவில் ட்ரைப் ஆம்ரபாலி அகன்க்ஷா அரோரா நிறுவனங்களின் சிஇஓ அனவிலா மிஸ்ரா, அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இராணி மற்றும் தொழிலதிபர் ஹிமான்ஷு வர்தன், எழுத்தாளர் சீமா கோஸ்வாமி ஆகியோர் சிறப்பு அமர்வு ஒன்றில் கலந்து கொண்டனர்.
இந்த அமர்வின் தொடக்கத்தில், ஸ்மிருதி இராணி, 2000களின் தொடக்கத்தில் பெண் தொழில் வல்லுநர்கள் சேலை அணிந்து இருப்பது எப்படி பார்க்கப்பட்டது என்பதைப் பற்றிப் பேசினார்.

புதுமைகள், தொழில்நுட்பம் பற்றிப் பேசிய ஸ்மிருதி இராணி, "உலகம் முழுவதும் நிலையான நுகர்வு என்பது குறித்து விவாதம் இப்போது அதிகரித்து வருகிறது. இந்தியா கைவினை பொருட்களின் வழியாக இப்போது தான் இந்த நிலையான வளர்ச்சி அல்லது நுகர்வை உலகம் புரிந்து கொண்டி வருகிறது. இது ஆச்சரியம் அளிக்கும் ஒன்று" என்றார்.
நான்காவது நாளின் அட்டகாசமான நிகழ்வுகளைத் தொடர்ந்து இந்த கொண்டாட்டத்தின் கடைசி நாளில், ஜெனில் தோலாகியா நிகழ்த்திய நாத யோகாவின் சவுண்ட்ஸ் ஆஃப் சைலன்ஸ் என்ற அமர்வு இடம்பெற்றது. இதில் தோலக்கியா தனது மந்திர உச்சரிப்பு மற்றும் உடலில் சில ஆற்றல் புள்ளிகளை உள்ளடக்கிய திபெத்தியப் பாடும் கிண்ணங்களைப் பயன்படுத்தினார். இது பார்வையாளர்கள் மனம், உடலுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதாக இருந்தது.

10ஆம் நாள் நிகழ்வுகள்
A Thousand Miles: To Hell and Back, என்ற அமர்வில், விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் வினோத் கப்ரி; பத்திரிக்கையாளர், தொகுப்பாளர் பர்கா தத், எழுத்தாளர் சின்மய் தும்பே ஆகியோர் கலந்துரையாடினர். கொரோனா பரவல் குறித்தும் அதை இந்தியா எப்படி எதிர்கொண்டது என்பது குறித்தும் அவர்கள் விவாதித்தனர், அதைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எப்படி பட்டினி மற்றும் வேலையில்லாமல் இருந்தனர் என்பது குறித்தும் விவாதித்தனர்.
கப்ரியின் 1232 கிமீகள் ஏழு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமத்திற்குப் பயணம் செய்வதை ஆவணப்படுத்துகிறது. கொரோனா சமயத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் வீட்டிற்கு நடந்தே செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இதுபோன்ற கொடிய சூழ்நிலையில் நிர்வாகங்களும் அவர்களைக் கைவிட்டதாக கப்ரி கூறினார், அதேபோல பர்கா தத் இடைவிடாமல் மற்றும் பல மாதங்களாகப் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சாலையில் இருக்க வேண்டியது குறித்து அவரது புதிய டு ஹெல் அண்ட் பேக்: ஹ்யூமன்ஸ் ஆஃப் கோவிட் புத்தகத்தில் விளக்கி உள்ளார். கொரோனா பெருந்தொற்று மற்றும் வர்க்கம், சாதி மற்றும் பாலினம் ஆகிய ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட ஒரு தேசத்தின் மோசமான வேர்களை இந்த புத்தகம் விளக்குகிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications