இன்று பத்திரிகை சுதந்திர தினம்.. பத்திரிகையாளரின் உரிமையால் தான் மக்களை பாதுகாக்க முடியும் - சத்குரு

Subscribe to Oneindia Tamil

கோவை: ‛‛நிஜங்களை அயராமல் தெரிவிக்கும் ஒரு பத்திரிகையாளரின் உரிமையால் மட்டுமே ஒரு குடிமகனின் சமூக அறிதலுக்கான உரிமை பாதுகாக்கப்படும்'' என சத்குரு தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று பத்திரிகை துறையாகும். இந்தியா முழுவதும் பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தை பாதுகாப்பது, பத்திரிகையாளர்களின் மீதான தாக்குதலை தடுக்கும் விதமாக ஆண்டுதோறும் உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

The right of a citizen to social knowledge can only be safeguarded by the right of a journalist, says Sadhguru

1993 முதல் மே 3ம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினம் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பத்திரிகை துறை குறித்தும், பத்திரிகை துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பது பற்றியும் பல்வேறு தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கோவை ஈஷா அறக்கட்டளையின் நிறுவன தலைவரான சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛பொறுப்பான ஊடகவியல் என்பது ஜனநாயகத்தில் உறுதியாக நிலைத்திருக்கும் ஓர் சமுதாயத்தின் முத்திரையாகும். நிஜங்களை அயராமல் தெரிவிக்கும் ஒரு பத்திரிகையாளரின் உரிமையால் மட்டுமே ஒரு குடிமகனின் சமூக அறிதலுக்கான உரிமை பாதுகாக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+