டிஜிட்டல் பணம் செலுத்தலில் சாதனை - மார்ச்சில் யூபிஐ பரிவர்த்தனை ரூ10 லட்சம் கோடி - பிரதமர் மோடி
டெல்லி: டிஜிட்டல் பணம் செலுத்தலில் நாடு சாதனை படைத்து வருவதாகவும் மார்ச் மாதத்தில் நாட்டில் யூபிஐ பரிவர்த்தனை ரூ10 லட்சம் கோடியை எட்டியது என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று வானொலியில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் உரையாற்றியதாவது:

தேசத்திற்குக் கிடைத்திருக்கும் புதிய பிரதம மந்திரி அருங்காட்சியகம் குறித்து நான் பேசுகிறேன். இந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று பாபா சாஹேப் அம்பேட்கரின் பிறந்த நாளன்று பிரதம மந்திரி அருங்காட்சியகமானது நாட்டுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. இது, தேசத்தின் குடிமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து விடப்பட்டிருக்கிறது. தேசத்தின் பிரதம மந்திரிகளின் பங்களிப்பை நினைவில் கொள்ளும் வகையிலே, சுதந்திரத்தின் அமிர்த மஹோத்ஸவத்தை விடச் சிறப்பான தருணம் வேறு என்னவாக இருக்க முடியும், சொல்லுங்கள்? சுதந்திரத்தின் அமிர்த மஹோத்ஸவமானது ஒரு மக்கள் இயக்கமாகப் பரிமளித்து வருகிறது என்பது தேசத்திற்குப் பெருமை சேர்க்கும் ஒன்று. வரலாறு தொடர்பாக மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது, இந்த நிலையில் பிரதம மந்திரி. அருங்காட்சியகமானது இளைஞர்களைக் கவரக்கூடிய ஒரு மையமாக மாறி வருகிறது, அவர்கள் தேசத்தின் விலைமதிப்பில்லாத மரபோடு தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றார்கள்.
மே மாதம் 18ஆம் தேதியன்று உலகம் முழுவதிலும் சர்வதேச அருங்காட்சியக தினத்தைக் கொண்டாடவிருக்கிறது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். இதை கவனத்தில் கொண்டு, நமது இளைய நண்பர்களுக்காக என்னிடத்திலே ஒரு எண்ணம் ஏற்படுகிறது. ஏன் வரவிருக்கும் விடுமுறை நாட்களில், நீங்களும் உங்களுடைய நண்பர்களும் இணைந்து, ஏதோ ஒரு அருங்காட்சியகத்தைப் பார்த்து விட்டு வரக்கூடாது! நீங்கள் உங்களுடைய அனுபவங்களை #MuseumMemories என்பதிலே பகிர்ந்து கொள்ளலாமே!! இப்படிச் செய்வதன் மூலம் மற்றவர்களின் மனதிலும் கூட அருங்காட்சியகங்கள் மீதான ஆர்வம் விழிப்படையும்.இது தில்லி, மாநகர், இங்கே இவை எல்லாம் கிடைப்பது சுலபம் என்று நினைக்கலாம். ஆனால் இப்போது எல்லாம் யூ பி ஐயின் பரவலாக்கம், தில்லி போன்ற பெருநகரங்களில் மட்டும் இருக்கிறது என்பது கிடையாது. கடந்த சில ஆண்டுகளில் பீம் யூபிஐ, ஆகியவை விரைவாக நமது பொருளாதாரம் மற்றும் பழக்கங்களின் அங்கமாக மாறிவிட்டன. இப்போது சின்னச்சின்ன நகரங்களிலும், பெரும்பான்மையான கிராமங்களிலும் கூட, மக்கள் யூபிஐ வாயிலாக கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வருகிறார்கள். டிஜிட்டல் முறை பொருளாதாரம் மூலமாக தேசத்தில் ஒரு புதிய கலாச்சாரம் உருவாகி வருகிறது. சின்னச்சின்ன தெருக்கள்-சந்துகளில் இருக்கும் சிறிய கடைகளிலும் கூட டிஜிட்டல் முறை பணப்பரிவர்த்தனை செய்யப்படுவதால், அதிக அளவிலான வாடிக்கையாளர்களுக்குச் சேவை புரிவது எளிதாகி விட்டது. பணத்தைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வேண்டிய சிரமமும் இப்போது இல்லை. நீங்களும் யூபிஐ வசதியை உங்கள் அன்றாட வாழ்க்கையில் அனுபவித்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். எங்கே சென்றாலும், ரொக்கத்தைக் கொண்டு செல்லுதல், வங்கிக்குச் செல்லுதல், ஏடிஎம்மைத் தேடுதல் போன்ற சங்கடங்களுக்கு முடிவு. மொபைல் வாயிலாகவே அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளும் முடிந்து விடுகின்றன, ஆனால் உங்களுடைய இந்தச் சின்னச்சின்ன நிகழ்நிலை பணம் செலுத்தல் காரணமாக தேசத்தில் எத்தனை பெரிய டிஜிட்டல் பொருளாதாரம் உருவாகி இருக்கிறது என்பதைப் பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா? இந்த சமயத்தில் நமது தேசத்தில் கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய்க்கான பணப்பரிவர்த்தனைகள், நாளொன்றிற்கு நடைபெற்று வருகின்றன. கடந்த மார்ச் மாதத்தில், யூபிஐ பரிவர்த்தனை கிட்டத்தட்ட 10 இலட்சம் கோடி ரூபாயை எட்டி விட்டது. இதனால் தேசத்தில் வசதிகளும் அதிகரித்து வருகிறது, நாணயமான ஒரு சூழலும் உருவாகி வருகிறது. இப்போது தேசத்தில் நிதித்துறையில் தொழில்நுட்பத்தோடு இணைந்த பல புதிய ஸ்டார்ட் அப்புகளும் முன்னேற்றம் கண்டு வருகின்றன. உங்களிடத்திலும் டிஜிட்டல் வழி பணம் செலுத்தல் மற்றும் ஸ்டார்ட் அப் சூழல் அமைப்பின் இந்த சக்தியோடு தொடர்புடைய அனுபவம் இருந்தால், அவற்றை நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய அனுபவம், நாட்டுமக்கள் பலருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கலாம்.
மாற்றுத் திறனாளி நண்பர்களின் அசாதாரணமான திறமைகளின் ஆதாயம், தேசத்திற்கும் உலகிற்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்தப் பணி. நமது மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகளால் என்ன சாதிக்க முடியும் என்பதை நாம் டோக்கியோ பேராலிம்பிக்ஸிலே கண்டோம். விளையாட்டுக்களைப் போலவே, கலைகள், கல்வித்துறை என பல துறைகளிலும் மாற்றுத் திறனாளி நண்பர்கள் அருமையான செயல்பாடுகளைப் புரிந்திருக்கிறார்கள் என்றாலும், இந்த நண்பர்களுக்குத் தொழில்நுட்பத்தின் சக்தி கிடைக்கின்ற போது, இவர்கள், மேலும் பெரிய சாதனைகளைப் படைக்கின்றார்கள். ஆகையால், தேசம் இப்போது தொடர்ந்து ஆதாரங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிமையாக இருக்கும் வகையில் தொடர்ந்து ஏற்பாடு செய்ய முயற்சி செய்து வருகிறது. தேசத்தின் பல ஸ்டார்ட் அப் அமைப்புகளுமே கூட, இந்தத் திசையில், கருத்தூக்கம் அளிக்கும் பணிகளை ஆற்றி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அமைப்புத் தான் Voice of specially-abled people, இந்த அமைப்பு உதவும் தொழில்நுட்பத் துறையில் புதிய சந்தர்ப்பங்களுக்கு ஊக்கமளிக்கிறது. மாற்றுத் திறனாளிக் கலைஞர்களின் பணியை, உலகெங்கிலும் கொண்டு செல்ல, ஒரு நூதனமான தொடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. Voice of specially-abled people என்ற இந்த அமைப்பு, இந்தக் கலைஞர்களின் ஓவியங்கள் அடங்கிய டிஜிட்டல் கலைக்கூடத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. மாற்றுத் திறனாளி நண்பர்கள் எந்த வகையில் அசாதாரணமான திறமைகள் நிரம்பியவர்களாக இருக்கின்றார்கள், அவர்களிடத்திலே எத்தனை அபாரமான திறன்கள் ஒளிந்திருக்கின்றன என்பதற்கு இந்தக் கலைக்கூடமே ஒரு எடுத்துக்காட்டு. மாற்றுத் திறனாளி நண்பர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சவால்கள் இருக்கின்றன, இவற்றிலிருந்து வெளியேறி அவர்கள் எந்த இடத்தைச் சென்றடைய முடியும்!! இப்படி பல விஷயங்கள் குறித்து இந்த ஓவியங்களில் நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். உங்களுக்கு யாராவது மாற்றுத் திறனாளி நண்பரைத் தெரியும், அவருடைய திறமையை நீங்கள் அறிவீர்கள் என்றால், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியோடு அதை உலகத்தின் பார்வைக்குக் கொண்டு வாருங்கள். மாற்றுத் திறனாளி நண்பர்களும் கூட இப்படிப்பட்ட முயற்சிகளோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, தேசத்தின் பல பாகங்களில் வெப்பம் அதிக தீவிரத்தோடு அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் வெப்பத்தில், நீரை சேமிப்பது என்ற பொறுப்பும் கூட அதே அளவுக்கு அதிகரித்து வருகிறது. நீங்கள் எங்கே இருந்தாலும், அங்கே போதுமான அளவுக்கு நீர் ஒருவேளை இருக்கலாம். ஆனால், நீர்த்தட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும், அவர்களுக்கு ஒவ்வொரு சொட்டு நீரும், அமிழ்துக்கு ஒப்பானதாகும். நண்பர்களே, இந்த சமயத்தில், சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு, சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தின் போது, தேசம் எத்தகைய உறுதிப்பாடுகளைத் தாங்கி முன்னேறிக் கொண்டிருக்கிறதோ, அதிலே நீர் பராமரிப்பு என்பதும் ஒன்றாகும். அமிர்த மஹோத்சவமத்தின் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகளை நாம் உருவாக்குவோம். இது எத்தனை பெரிய இயக்கம் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா. உங்கள் அனைவரிடத்திலும், குறிப்பாக இளைஞர்களிடத்தில் கேட்டுக் கொள்வதெல்லாம், அவர்கள் இந்த இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், இதனைத் தங்களின் பொறுப்பாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பது தான். நீங்கள் உங்கள் பகுதியில் சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடைய வரலாறு ஏதேனும் இருந்தால், ஏதேனும் ஒரு போராட்ட வீரரின் நினைவுச் சின்னம் இருந்தால், அதையும் கூட நீங்கள் அமிர்த நீர்நிலையோடு இணைக்கலாம். அமிர்ந்த நீர்நிலை அமைப்பது பற்றிய உறுதிப்பாடு மேற்கொண்ட பிறகு பல இடங்களில் இது தொடர்பாகப் பணிகள் படுவிரைவாக நடந்தேறி வருவதாக எனக்குச் செய்திகள் வருகின்றன, இது மகிழ்ச்சியை அளிக்கிறது. யூபியின் ராம்புரின் கிராமப் பஞ்சாயத்து பட்வாயி பற்றி எனக்குத் தகவல் கிடைத்தது. அங்கே கிராம சபை நிலத்தில் ஒரு குளம் இருந்தது. ஆனால் அது மாசடைந்து, கழிவுகள்-குப்பைகளால் நிரம்பி இருந்தது. கடந்த சில வாரங்களில், தீவிர முயற்சிகளுக்குப் பிறகு, அந்தப் பகுதி மக்களின் உதவியோடு, வட்டார பள்ளிக் குழந்தைகளின் துணையோடு, இந்த மாசடைந்த குளத்திற்கு மீளுயிர் அளிக்கப்பட்டது. இப்போது இந்தக் குளத்தின் கரைகளில் தடுப்புச் சுவர்கள், சுற்றுச் சுவர்கள், உணவிடங்கள், நீரூற்றுக்கள், ஒளியமைப்புகள் என பலவகையான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ராம்புரின் பட்வாயி கிராமப் பஞ்சாயத்திற்கும், கிராமத்து மக்களுக்கும், அங்கிருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும், இந்த முயற்சிக்காக, பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீரோடு தொடர்புடைய ஒவ்வொரு முயற்சியும் நமது எதிர்காலத்தோடு தொடர்புடையது. இதிலே முழுமையாக சமூகத்தின் கடமை இருக்கிறது. இதற்காக பல நூற்றாண்டுக்காலமாக பல்வேறு சமூகங்கள், பல்வேறு முயற்சிகளைத் தொடந்து செய்து வருகின்றார்கள். எடுத்துக்காட்டாக, கட்சின் ரணிலே இருக்கும் ஒரு பழங்குடியினமான மால்தாரீ, நீர் பராமரிப்பின் பொருட்டு, வ்ருதாஸ் என்ற பெயர் கொண்ட வழிமுறையைப் பயன்படுத்துகிறது. இதன்படி, சிறிய குளங்கள் ஏற்படுத்தப்பட்டு, இவற்றைப் பாதுகாக்க அருகிலே மரங்கள்-செடிகள் நடப்படும். இதைப் போன்றே மத்திய பிரதேசத்தின் பீல் பழங்குடியினர் தங்களுடைய பாரம்பரியமான ஹல்மா வாயிலாக நீர் பராமரிப்பைச் செய்து வருகின்றார்கள். இந்தப் பாரம்பரியப்படி, இந்தப் பழங்குடியினத்தவர், நீரோடு தொடர்புடைய பிரச்சனைகளுக்கான தீர்வுக்காக ஓரிடத்தில் ஒன்று கூடுகிறார்கள். ஹல்மா பாரம்பரியத்திலே கிடைத்த ஆலோசனைகள் காரணமாக இந்தப் பகுதியில் நீர்த் தட்டுப்பாடு குறைந்திருப்பதோடு, நிலத்தடி நீர் மட்டமும் உயர்திருக்கிறது.
நண்பர்களே, இப்படிப்பட்ட கடமையுணர்வு உங்கள் மனதிலும் வந்து விட்டால், நீர் பிரச்சனையோடு தொடர்புடைய எத்தனை பெரிய சவாலாக இருந்தாலும், அதற்குத் தீர்வைக் கண்டுவிட முடியும். சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவக் காலத்தில், நாம் நீர் பராமரிப்பு, நீர் பாதுகாப்பு தொடர்பான உறுதிப்பாடுகளை மேற்கொள்வோம் வாருங்கள். ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் பாதுகாப்போம், ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவோம்.
இந்தியர்களான நமக்கெல்லாம் கணிதம் எப்போதுமே சிக்கலான ஒன்றாக இருந்ததில்லை, இதற்கான ஒரு பெரிய காரணம் நமது வேதக்காலக் கணிதமும் கூட. நவீன காலத்தில் வேத கணிதத்தின் மாட்சியை வெளிப்படுத்திய பெருமை முழுக்க ஸ்ரீ பாரதீ கிருஷ்ண தீர்த்த ஜி மஹாராஜையே சாரும். அவர் தான் கணக்கீடுகளின் பண்டைய முறைக்கு மீளுயிர் அளித்து, இதற்கு வேத கணிதம் என்ற பெயரளித்தார். வைதிக கணிதத்தின் மிகச் சிறப்பான விஷயம் என்னவென்றால், இதன் மூலம் நீங்கள் மிகக்கடினமான கணக்கீடுகளை, கண்ணிமைக்கும் நேரத்தில் மனதிற்குள்ளேயே செய்து விட முடியும். இப்போதெல்லாம் சமூக ஊடங்களில் வேத கணிதத்தைக் கற்றுக் கொள்ளவும், கற்பிக்கவும் கூடிய பல காணொளிகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.
மனதின் குரலில் நாம் இன்று அருங்காட்சியகம் முதல், கணிதம் வரையிலான பல அறிவார்ந்த விஷயங்களைப் பற்றிப் பேசினோம். இந்த விஷயங்கள் அனைத்தும், உங்கள் ஆலோசனைகள் காரணமாகவே மனதின் குரலில் இடம் பிடித்திருக்கின்றன. நீங்கள் அனைவரும் இதைப் போலவே, வருங்காலத்திலும் உங்கள் ஆலோசனைகளை நமோ செயலியிலும், மைகவ் வாயிலாகவும் அனுப்பி வாருங்கள். வரும் நாட்களில் தேசத்தில் ஈத் பண்டிகை வரவிருக்கிறது. மே மாதம் 3ஆம் தேதி அட்சய திரிதியையும், பகவான் பரசுராமரின் ஜெயந்தியும் கொண்டாடப்பட இருக்கின்றன. சில நாட்கள் கழித்து பைசாக் புத்த பூர்ணிமை நாட்களும் வரவிருக்கின்றன. இந்தப் பண்டிகைகள் அனைத்தும், ஒழுங்குமுறை, புனிதத்தன்மை, கொடை மற்றும் சகோதரத்துவத்தை முன்னிறுத்துபவை. உங்கள் அனைவருக்கும் இந்தப் பண்டிகைகளுக்கான மிகப்பிரியமான நல்வாழ்த்துக்கள். இந்தத் திருநாட்களை உல்லாசமாகவும், சகோதரத்துவத்தோடும் நன்றாகக் கொண்டாடுங்கள். இவை அனைத்திற்கும் இடையே, கொரோனா தொடர்பாகவும் விழிப்போடு இருங்கள். முகக்கவசம் அணியுங்கள், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடியுங்கள், கைகளைக் கழுவுவதை மறவாதீர்கள், நம்மை நாமே தற்காத்துக் கொள்ள இவை அவசியமான உபாயங்கள், நீங்கள் இவற்றைக் கடைப்பிடித்து வாருங்கள். அடுத்த முறை மனதின் குரலில் நாம் மீண்டும் சந்திப்போம், நீங்கள் அனுப்பும் மேலும் புதிய விஷயங்களைப் பற்றி விவாதிப்போம், விடை கொடுங்கள் நண்பர்களே. பலப்பல நன்றிகள்.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications