குதிரைவாலி ரசம் சாதம் செய்யலாமா? சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மேஜிக் செய்யும் Kuthiraivali!
சென்னை: உடல் எடையையும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க குதிரைவாலி அரிசியை பயன்படுத்தலாம். அதில் கலந்த சாதம், வெள்ளை சாதம், பொங்கல், பிரியாணி என செய்து அசத்தலாம். ஆனால் குதிரைவாலி ரசம் சாதம் வைக்கலாமா?
சிறுதானியங்களின் பயன்பாடு தற்போது மக்களிடையே அதிகரித்துள்ளது. அதன் மீதான விழிப்புணர்வு காரணமாகவும் இந்த தானியங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதாவது வெள்ளை நிற சாதத்தை அறவே தவிர்த்துவிட மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதாவது வெள்ளை சர்க்கரை, பச்சரிசி, பொன்னி அரிசி உள்ளிட்டவை!
அந்த வகையில் குதிரைவாலி எனும் சிறுதானியம் மலச்சிக்கல், உடல் எடை, நீரிழிவு உள்ளிட்ட பிரச்சினைகளை போக்க உதவுகிறது. இந்த குதிரைவாலி அரிசியை சாதமாக வடித்து சாப்பிடலாம்.
எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், புதினா சாதம், கொத்தமல்லி சாதம் என செய்து அசத்தலாம். அது போல் உப்புமா, பொங்கலையும் செய்து கொள்ளலாம்.
அப்படிப்பட்ட இந்த அரிசியில் ரசம் வைப்பது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
குதிரைவாலி அரிசி -1 கப்
புளி- ஒரு சிறிய எலுமிச்சை அளவு
தக்காளி- 1
சீரகம்- 1 டீஸ்பூன்
மிளகு- 1 டீஸ்பூன்
தனியா- 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
கடும்- 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- ஒரு கொத்து
கொத்தமல்லி- சிறிதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை
குதிரைவாலி அரிசியை 5,6 முறை கழுவி 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். பின்னர் குக்கரில் ஒரு கப்பிற்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
புளியை கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
சீரகம், மிளகு, தனியா ஆகியவற்றை பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு அது வெடித்ததும் உளுத்தம் பருப்பை போடவும். பின்னர் கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிவிடவும். பிறகு புளி கரைசல், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிக்கும் குழம்புடன் அரைத்து வைத்த பொடியை தூவி கலக்கவும்.
வேகவைத்த குதிரைவாலி சாதத்தை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விட்டால் ரசம் சாதம் கிடைக்கும். பிறகு சூடாக பரிமாறலாம்.
இதை அப்படியே குக்கரிலும் செய்து கொள்ளலாம். ஒரு டம்ளர் அரிசிக்கு புளி கரைசல் எல்லாவற்றையும் சேர்த்து 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து தளதளவென வேக வைத்து தாளித்துக் கொட்டலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications