2 உருளைக் கிழங்கு இருந்தால் போதும்! சூப்பரான Crispy French Fries வீட்டிலேயே செய்யலாமே!
French Fries recipe: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் பிரென்ச் பிரைஸ்! இதை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதெல்லாம் பெரிய விஷயமா என நினைக்காதீர்கள்.
இது சில நேரங்களில் பிரென்ச் பிரைஸ் எண்ணெயில் பொரித்தாலும் மொறுமொறுப்பாக வருவதில்லை. ஆனால் இந்த செய்முறையில் செய்தால் நன்றாக வரும்.

தேவையான பொருட்கள்
பெரிய உருளைக் கிழங்கு- 2
எண்ணெய் பொரிக்க
உப்பு- சிறிது
மிளகாய் தூள்- சிறிது
செய்முறை
முதலில் உருளைக் கிழங்கின் தோலை சீவிக் கொள்ளவும்.
பின்னர் உருளைக் கிழங்கை நீளவாக்கில் கட் செய்து தண்ணீரில் போடுங்கள்.
எல்லாவற்றையும் கட் செய்ததும் தண்ணீரில் இருந்து வடித்து விடுங்கள்.
இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெந்நீர் காய்ந்ததும் இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவி, அந்த குழிகளில் சிறிது சிறிதாக கட் செய்த உருளைக் கிழங்கை போட்டு 30 வினாடிகள் மட்டுமே மீடியம் தீயில் வைத்திருக்க வேண்டும்.
இதனால் உருளைக் கிழங்கில் உள்ள ஸ்டார்ச் நன்றாக இறுகி, எண்ணெயில் போட்டதும் உடையாமல் மொறுமொறுப்பாக இருக்கும்.

பின்னர் இட்லி தட்டில் இருந்து எடுத்து ஆறவிடுங்கள். அதற்கு கடாயில் எண்ணெய் காய வைத்து இந்த உருளைக் கிழங்குகளை எடுத்து எண்ணெயில் போடுங்கள்.
எண்ணெயின் சலசலப்பு அடங்கியதும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். பிறகு மீண்டும் ஒரு முறை எண்ணெயில் போட்டு பொன்னிறம் ஆகும் வரை பொரித்தெடுக்கவும்.
இதை வடிஜல்லியில் போட்டு எண்ணெய் வடிந்ததும் அதன் மீது உப்பு, மிளகாய் பொடி தூவவும். டொமேட்டோ சாஸுடன் பறிமாறலாம். இந்த சிப்ஸுக்கு சாட் மசாலா, மிளகு பொடி கூட தூவலாம்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications