Tips to remove Lizard: கிச்சனில் பல்லி தொல்லை! சாம்பாரில் விழுவதற்கு முன்பு விரட்டுவது எப்படி?
How to remove Lizard: வீடுகளில் பல்லிகளை விரட்டுவது எப்படி என்பதை பார்க்கலாம். இதற்காக ரசாயனம் எல்லாம் சேர்க்க தேவையில்லை. அந்த பல்லிகளுக்கு பிடிக்காத ஒரு வாசனையை வைத்தே விரட்டலாம் என்கிறார்கள்.
வீடுகளில் பல்லிகள் இருக்கும். இவற்றை வைத்து பலன்களை கூட பலர் கணிப்பார்கள். மேலும் பல்லி சப்தத்திற்கும் ஒரு பலன் உள்ளது. இது போன்ற பல்லிகள் சமையல் அறைகளில் இருப்பதால்தான் பிரச்சினை எழுகிறது.

அது எங்கே உணவுகளில் விழுந்துவிடுமோ என அச்சப்பட வேண்டிய நிலை உள்ளது. இந்த பல்லிகளால் சமையல் அறையில் கரப்பான், பாசை பூச்சி போன்றவற்றின் தொல்லைகள் இருக்காது. அவற்றை உண்டு பல்லிகள் உயிர் வாழ்கின்றன.
ஆனாலும் கொதிக்கும் குழம்பிலோ ரசத்திலோ விழுந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் இருந்து கொண்டே இருக்கும். இதற்காக பல்லிகளை விரட்ட ரசாயனம் கலந்த மருந்துகளை வாங்கலாம் என்றால் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அது அதிக ஆபத்தை கொடுக்கும். சிலர் பல்லிகள் இருக்கும் இடத்தில் முட்டை ஓடுகளை வைப்பதுண்டு. என்னதான் ஜன்னலுக்கு வலை அடித்தாலும் பல்லிகள் எப்படியாவது வந்துவிடும். இதனால் அந்த அளவுக்கு பலன் கிடையாது.
வீட்டு உபயோக பொருட்களை வைத்தே பல்லிகளை எப்படி விரட்டலாம் என்பது குறித்து பார்க்கலாம். அதாவது ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து தோராயமாக துண்டாக்கிக் கொள்ளவும். அதனுடன் 3 பல் பூண்டு, சிரித்து எலுமிச்சை சாறு, சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் சிரித்து தண்ணீர் ஊற்றில் அதில் கொஞ்சம் மிளகு தூள் போட்டு, அரைத்த விழுதை சேர்த்து நுரை வரும் வரை கலந்து விடவும். பின்னர் அதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் சேர்த்து எங்கெல்லாம் பல்லி அதிகம் வந்து செல்கிறோ அந்த இடத்தில் ஸ்பிரே செய்தால் போதும். பல்லி தொல்லை இருக்காது. இந்த ஸ்பிரேவால் குழந்தைகளுக்கும் பிரச்சினை இல்லை.
பொதுவாக பல்லிகள் வீட்டில் இருப்பது நன்மை என சொல்வார்கள். எனவே சமையலில் பல்லி விழாத அளவுக்கு மூடிவைத்து சமைப்பது, சமையல் அறையை விட்டு நகராமல் இருப்பது போன்ற செயல்களை செய்தாலும் பல்லி சாம்பாரில் விழுந்து விடும் பயம் இருக்காது. அதிலும் வெள்ளை நிற பல்லிகள் வீட்டில் இருப்பது நல்லது என்கிறார்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications