Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி.. இப்படி சமைச்சு பாருங்க
Kerala kadalai curry recipe: கேரளா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புட்டும், கடலைக் கறியும் தான். புட்டுக்கு மட்டுமல்ல இடியாப்பம், தோசை, இட்லி, சப்பாத்தி என அனைத்திற்கு அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும் கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..
கடலைக் கறி செய்யத் தேவையான பொருட்கள்
கருப்பு சுண்டல் - 1 கப்
வெங்காயம் - 3
பல் பூண்டு - 5
இஞ்சி - சிறிய துண்டு
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

தனியா தூள் - 2 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 கப்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை
பச்சை மிளகாய் - 2
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
சோம்பு - 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்
கடலை கறி செய்யத் தேவையான பொருள்கள்
முதலில் கருப்பு சுண்டலை இரவு முழுக்க ஊறவைக்கவும். குக்கரில் கடலையுடன் உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.
2. அடுப்பில் கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து வதக்கவும்.
3. பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. அதில், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும். பின்னர், தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும்.
5. நன்றாக வதங்கியதும் மிக்ஸி ஜாரில் மசாலா கலவைகளை போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர், சிறிதளவு கடைலையையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
6. மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு, வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதங்கிய பின்னர் அரைத்த விழுதுகளை சேர்க்கவும்.
7. தேவையான அளவு உப்பு சேர்த்த்து கொண்டைக் கடலையை போட்டு, தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும்.
8. நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சூப்பரான கேரளா கடலைக் கறி தயார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications