ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.. திணை அரிசி குழிப் பணியாரம் செய்வது எப்படி?
Thinai Arisi Paniyaram Recipe in Tamil: இட்லி, தோசை என்பது தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது. என்னதான் புதிய புதிய வகை உணவுகளை ட்ரை செய்தாலும் இட்லி, தோசைக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இருந்தாலும் எப்போதும் இட்லி, தோசையா என்ற கேள்வியை எதிர்கொள்ளாத வீடுகளே இருக்காது எனலாம். இருப்பினும், ஈஸியாக சட்டென செய்யக் கூடியது என்பதால் எல்லோருடைய தேர்வாகவும் உள்ளது.
காலையில் இட்லி, தோசை, மதியம் சாப்பாடு சாம்பார், இரவில் மீண்டும் இட்லி, தோசை என அரிசி வகைகளை சாப்பிட்டு வெறுத்துப் போய்விட்டீர்களா.. ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் ருசியாக இருக்கும் உணவை தேடுகிறீர்களா.. அப்போ கண்டிப்பாக ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவான இந்த திணை அரிசி பணியாரத்தை ட்ரை பண்ணுங்க.. சும்மா அசந்து போயிருவீங்க..

தேவையான பொருள்கள்
திணை அரிசி - 1 கப்
உளுந்து - 1/4 கப்
கடுகு - 1/4 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 1
சீரகம் - 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை
ஆயில் - தேவையான அளவு
செய்முறை
- திணை அரிசி மற்றும் உளுந்தை மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், மிக்ஸியில் இட்லி மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் வதங்கியதும், அரைத்து வைத்துள்ள மாவில் இதனை சேர்த்து கலக்கவும்.
- மாவை நன்றாக கலந்த பிறகு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குழிப் பணியாரம் பதத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டும்.
- குழிப் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு முறுகலாக சுட்டு எடுத்தால் ஆரோக்கியம் நிறைந்த, துவை மிகுந்த திணை அரிசி குழிப் பணியாரம் ரெடி.
- அப்புறம் என்ன அலுவலகத்தில் இருந்து வரும் கணவருக்கும், பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கும் இதனை செய்து கொடுத்து அசத்துங்க..
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications