திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்
திருவண்ணாமலை:
உலகப் புகழ் பெற்ற திருவண்ணாமலை தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது.
பெரிய கார்த்திகை தீபத் திருநாளையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் இந்த மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.
திருவண்ணாமலை கோவிலின் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா முக்கியமானது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டன.
மாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அண்ணாமலையார், உண்ணாலையம்மன்,விநாயகர்,முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு அலங்காரம் செய்து அபிஷேகம் நடத்தப்படும்.
பின்னர் 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். அதைத் தொடர்ந்து 6 மணிக்கு கோவிலில் அகண்ட தீபம் ஏற்றப்படும்.அதே நேரத்தில் மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள 8 அடி உயர கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும்.
தீபம் ஏற்றுவதற்காக 3 கிலோ நெய், மற்றும் காடா துணிகள் பயன்படுத்தப்படவுள்ளன.
ஜோதி வடிவமாகக் காட்சி தரும் இந்த அர்த்தநாரீஸ்வரரை வணங்கினால் நமது பாவங்கள் ஒழியும் என்பது நம்பிக்கை.
மகா தீபம் ஏற்றப்படுவதைக் கண்டு தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள்திருவண்ணாமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
நேற்று இரவு பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றதாலும் பக்தர்கள் கூட்டத்திற்கு அளவே இல்லாமல் போனது. எங்குபார்த்தாலும் மக்கள் தலைகள் தான் தென்படுகின்றன.
பக்தர்களின் வசதிக்காக 3 சிறப்பு ரயில்களும், 1,000 பஸ்களும் விடப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில்5,000க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியையொட்டி நாடு முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான சாதுக்களும் திருவண்ணாமலையில்குவிந்துள்ளனர்.
திருவண்ணாமலை கோவிலை மத்திய தொல்பொருள்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்று வரும்பரபரப்பான சூழலில் இந்த தீபத் திருவிழா வந்துள்ளது.
திருப்பரங்குன்றத்திலும்...
இந் நிலையில் இன்று மதுரை திருப்பரங்குன்றம் மலையிலும் மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில் உள்ள தீபத் தூணில், ஒவ்வொரு ஆண்டும்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதுபோலவே இந்த ஆண்டும் புதன்கிழமை மாலை தீபம் ஏற்றப்படுகிறது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகள் கோரிக்கைவிடுத்து போராட்டம் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளன. ஆனால், உச்சியில் இஸ்லாமிய புனிதத் தலம் இருப்பதால் வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார்கோவிலிலேயே தீபத்தை ஏற்றுமாறு மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
யாராவது சிலர் தீபத்தை எடுத்துக் கொண்டு இஸ்லாமிய தலத்தை நோக்கி போய் பிரச்சனை செய்யலாம் என்ற அச்சம் நிலவுவதால் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உச்சிப் பிள்ளையார் கோவில் தீபத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications