நோன்பு பற்றிய விளக்கம்
நோன்பு அரபு மொழியில் ஸவ்மு என்னும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது, இதன் பொருள் தடுத்துக் கொள்ளுதல் என்பதாகும்.
இஸ்லாமியக் கடமை என்ற நிலையில் இதற்கு அளிக்கப்டும் விளக்கம், கிழக்கு வெளுக்கும் நேரத்திலிருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரை நோன்பு நோற்பதாகநாட்டம் (நிய்யத்து) வைத்து, எதையும் உண்ணாமலும், குடிக்காமலும், உடலுறவு கொள்ளாமலும் தன் உடலைத் தடுத்துக் கொள்வதுடன், உள்ளத்தின்விருப்பங்களைத் தடுத்து வைத்து, தன்னிடம் கட்டுப்பாட்டை வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.
ஒவ்வோர் ஆண்டிலும் ரமலான் மாதம் முழுவதும் வயது வந்த, சித்த சுவாதீனமுள்ள முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் 5 கடமைகளுள்ஒரு கடமை (பர்ளூ) ஆகும். இஸ்லாத்தின் 5 கடமைகளை ஃபர்ளு அல்ல என்று மறுப்பவன் காஃபிராகி (இஸ்லாத்தின் வட்டத்திலிருந்து வெளியேறி) விடுவதால்நோன்பு கடமை, என்பதை மறக்கக்கூடாது.
ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கத் தவறி விட்டால் அதனைப் பின்னர் நிறைவேற்றுவது (களாச் செய்வது) கடமை.
நோன்பைப் பற்றி குர்ஆன்
பற்றுறுதி கொண்டோரே! நீங்கள் பரிசுத்தமடைவதற்காக, உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்குக் கடமையாக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் நோன்புகடமையாக்கப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும், நன்மை தீமையை பிரித்தறியக் கூடியதாகவும் உள்ள குர்ஆன் அருளப்பெற்றதே இந்த ரமலான் மாதம்.
ஆகவே எவர் அம் மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால் எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்தைமேற்கொண்டிருப்பவராகவோ இருப்பின் (அவர் நோன்பை விடுவதற்கு அனுமதியுண்டு, எனினும் விடுபட்ட நோன்புகளை ரமலான் அல்லாத) மற்ற நாட்களில்கணக்கிட்டு (நோற்று) விடவும்.
அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடுக்)க விரும்புகிறானே தவிர உங்களுக்கு கஷ்டத்தை (க் கொடுக்க) விரும்பவில்லை.
நோன்பைப் பற்றி பெருமானார் (ஸல்)
ஆதமுடைய வழித் தோன்றல்களுக்கு, ஒவ்வொரு நற்செயலுக்கும் அது போன்ற பத்து முதல் எழுநூறு (பிரதி பலன்கள்) வரை அதிகரிக்கப்படுகின்றது -நோன்பைத் தவிர, ஏனெனில் நோன்பு எனக்குரியது. எனவே அதற்குரிய பலனை நானே அளிப்பேன். காரணம் எனக்காகவே நோன்பாளி தன் இச்சைகளையும்.தன் உணவையும் விட்டொதுங்குகிறான் என்று அல்லாஹ் கூறுகிறான் என்றும்: நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சி, அவர் நோன்பு திறக்கும் போது ஒரு மகிழ்ச்சி(நிலை)யும், தன் இறைவனைச் சந்திக்கும் போது ஒரு மகிழ்ச்சி (நிலை)யும் உண்டு என்றும்: நோன்பாளியின் வாயில் ஏற்படும் வாடை இறைவனிடம் கஸ்தூரியின்மணத்தை விட மிகவும் மேலானதாகும் என்றும் ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications