Aippasi Annabishekam: இன்று ஐப்பசி அன்னாபிஷேகம்! பக்தர்கள் மறந்தும் கூட செய்யக் கூடாதவை என்ன?
சென்னை: சிவன் கோயில்களில் இன்று ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெறும் நிலையில் பக்தர்கள் மறந்தும் கூட செய்யக் கூடாத விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கிரிவலம் வருவதுண்டு. ஆனால் ஐப்பசி மாத பவுர்ணமியில் அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு இன்றைய தினம் பவுர்ணமி என்பதால் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. சிவலிங்கத்திற்கு அன்னத்தை சாத்தி அதனுடன் பாகற்காயையும் சேர்த்து படைப்பார்கள்.
இந்த நாளில் பக்தர்கள் மறந்தும் கூட செய்யக் கூடாத விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
இந்த நாளில் அரிசி, பால், பால் பொருட்களை யாருக்கும் கடனாக வழங்கக் கூடாது. அது போல் இந்த பொருட்களை மற்றவர்களிடம் இருந்தும் கடனாக பெறக் கூடாது. இப்படி செய்தால் அன்னபூரணி மற்றும் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பது ஐதீகம்.
இந்த நாளில் உணவை உதாசீனப்படுத்தவோ வீணாக்கவோ கூடாது. ஐப்பசி அன்னாபிஷேகத்தில் இப்படி செய்தால் தீராத வறுமை உங்களை வந்து சேரும்.
ஐப்பசி பவுர்ணமி நாளின் மாலை நேரத்தில் நாம் குடியிருக்கும் வீட்டில் அனைத்து விளக்குகளையும் ஆன் செய்து வைக்க வேண்டும். வீட்டிலும் விளக்குகளை ஏற்ற வேண்டும். சூரியன் மறைந்த போது வெளிச்சம் இல்லாமல் இருப்பது அன்னலட்சுமி தங்காமல் வறுமை தாண்டவமாடும்.
இன்று சிவன் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பாகும். இந்த நாளில் சிவபெருமானுக்கு சாத்தப்பட்ட அன்னத்தையும் பாகற்காயையும் பிரசாதமாக வழங்குவார்கள். இதை சாப்பிட்டால் ஆரோக்கியம் பெருகும்.
சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களிலேயே அன்னாபிஷேகம்தான் சிறந்தது. சிவபெருமான் தனது தலையில் தாங்கியிருக்கும் சந்திர பகவான் தனது 16 கலைகளுடன் இந்த ஐப்பசி பவுர்ணமி நாளிலே பிரகாசிப்பதாக சொல்கிறார்கள்.
இதனால் சிவபெருமானின் தலையில் குடியிருக்கும் சந்திரனையும் வணங்குவதால் மனக்கவலைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
வீட்டில் அன்னாபிஷேகம் செய்யலாமா
அன்னாபிஷேகத்தை பார்ப்பது மட்டும் விசேஷமல்ல, அதற்கு தேவையான அரிசி, அபிஷேகத்திற்கு பால், தேன் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பதும் சிறப்பானது. அது போல் வீட்டிலும் அன்னாபிஷேகத்தை செய்யலாம். வீட்டில் உள்ள ஸ்படிகம், கருங்கல், உலோகத்தால் ஆன சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யலாம்.
வீட்டில் உள்ள லிங்கத்திற்கு வழக்கமாக செய்யும் பால் அபிஷேகம் முடித்துவிட்டு இலையிலோ அல்லது தட்டிலோ லிங்கத்தை வைக்க வேண்டும். லிங்கத்தின் அளவிற்கு ஏற்ப பச்சரிசியால் சாதம் வடித்து அதை ஆறவிட்டு பிறகு லிங்கத்தில் சாத்த வேண்டும். அத்துடன் காய்கறிகள், பழங்கள் கொண்டு அலங்கரிக்கலாம்.
-
வைகாசி விசாகம் 2026: எப்படி விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற முடியும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications