Karadaiyan Nonbu 2026: இன்று காரடையான் நோன்பு! தாலிச் சரடு மாற்றிக் கொள்ள உகந்த நேரம் எது?
சென்னை: மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் வேளையில், சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், தடையற்ற மகிழ்ச்சிக்காகவும் கடைபிடிக்கும் உன்னத விரதமே காரடையான் நோன்பு.
யமதர்மனிடமிருந்து போராடி தன் கணவன் சத்தியவானின் உயிரை மீட்ட சாவித்திரியின் தியாகத்தைப் போற்றும் இந்த விரதம், இந்த ஆண்டு மார்ச் 14, 2026 (சனிக்கிழமை) இன்று கடைபிடிக்கப்படுகிறது.

முக்கிய வழிபாட்டு நேரங்கள்
விரதம் தொடக்கம்: காலை 06:48 மணி.
சரடு மாற்ற நல்ல நேரம்: காலை 07:35 முதல் 08:20 வரை.
வழிபாட்டு நேரங்கள்: காலை 07:35 - 08:20 , மாலை 06:00 - 08:00 , இரவு 09:00 - 10:00.
விரதம் நிறைவு: மார்ச் 15, அதிகாலை 01:08 மணி.
வழிபாட்டு முறை
அதிகாலையில் மஞ்சள் பூசிக் குளித்து விரதத்தைத் தொடங்க வேண்டும். நாள் முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பு, முடியாதவர்கள் உப்பு, புளி சேர்க்காத உணவை உட்கொள்ளலாம்.
வீட்டுப் பூஜை அறையில் காமாட்சி அம்மன் படத்தின் முன் விளக்கேற்றி, அம்மன் திருவடியில் மஞ்சள் சரடை வைத்து வேண்ட வேண்டும். காமாட்சி அம்மனுக்கு கார அடை, இனிப்பு அடை, வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம் மற்றும் முக்கியமாக 'உருகாத வெண்ணெய்' ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.
பூஜை முடிந்ததும், கணவர் கையால் மஞ்சள் சரடைத் தன் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். கணவர் அருகில் இல்லாதவர்கள் மூத்த சுமங்கலிகள் கையால் கட்டிக் கொண்டு ஆசி பெறலாம். கன்னிப் பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டித் தாமே சரடு கட்டிக் கொள்ளலாம். அக்கம் பக்கத்து சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, பூ, தாலிச் சரடு கொடுத்து ஆசி பெறுவது கூடுதல் பலன் தரும்.
சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்
"உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் நூற்றேன், ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்."
"தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம், பர்துஹு ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா."
இந்த உன்னத நாளில் விரதமிருந்து வழிபடக் குடும்பத்தில் ஒற்றுமையும், செல்வ வளமும் பெருகும் என்பது ஐதீகம்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications