திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 15: தோழிகளிடையே செல்ல சண்டை! சுவாரஸ்யமா இருக்கே!
சென்னை: மார்கழி மாதம் 15-ஆம் நாள் இன்று! ஒரு பாடலை இரு தரப்பினர் பாடுவது போல், அவர்களின் பெயர்களை குறிப்பிடாமலே இனிமைப்பட பாடியிருக்கிறாள் ஆண்டாள்! பெண்களுக்கு பேசக் கற்றுத் தரவா வேண்டும். இந்த பாடல் ஒரு பெண்ணை மற்ற பெண்கள் கிண்டல் செய்யும் வகையில் நகைச்சுவையாக பாடப் பெற்றுள்ளது.

திருப்பாவை பாடல் 15
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: நீண்ட நேரம் காத்திருந்த தோழியை மற்றவர்கள் எழுப்ப, அவள் கோபத்துடன், "என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுவேன்," என பதிலளித்தார்.
நீண்ட உறக்கத்திற்குப் பின் கோபப்படும் அவளைத் தோழிகள் கிண்டல் செய்ய, "எனக்குப் பேசத் தெரியாது; நீங்களே பேச்சில் திறமைசாலிகள்; நான் ஏமாற்றுக்காரிதான்," என்று அவர் கேலியாகக் கூறினார்.
முன்னமே எழுந்திருந்த தாங்கள், அவளிடம் இல்லாத சிறப்பு என்னவென்று வினவ, "நான் மட்டும் எழாததுபோல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா?" என அவர் எதிர் கேள்வியெழுப்பினார்.
முடிவாக, வெளியே வந்து மற்றவர்களை எண்ணிப் பார்த்துவிட்டு, குவலையாபீடத்தை அழித்து எதிரிகளை வேட்டையாடிய மாயக்கண்ணனை வணங்க உடன் வருமாறு அழைத்தனர்.
திருவெம்பாவை பாடல் 15
ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: ஓர் ஆழமான பக்தியில் திளைக்கும் பெண், சிவபெருமானை 'எம்பெருமான்' என இடையறாது அழைக்கிறாள். அவரது புகழை இடைவிடாமல் பேசும் போது, அவளது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாகப் பெருகுகிறது. இந்தத் தெய்வீகப் பரவச உலகில் இருந்து பூவுலகை முற்றிலும் மறந்துவிடுகிறாள்.
அவரது பக்தியின் தீவிரம் எவ்வளவு என்றால், விண்ணிலிருந்து எந்த தேவன் வந்தாலும் அவள் வணங்கமாட்டாள். சிவபெருமான் ஒருவரே தனது தெய்வம் என்ற உறுதியில் மெய்மறந்து நிற்கிறாள். இவளது அசைக்க முடியாத பக்தியைப் போலவே, நம்மையும் ஆட்கொள்ளக் காத்திருக்கும் சிவனின் திருவடிகளைப் பணிந்து, பூக்கள் நிறைந்த குளங்களில் நீராடி, நாமும் அந்த தெய்வீக அனுபவத்தை அடைவோம்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications