தை மாதம் 2026 முகூர்த்த நாட்கள் என்னென்ன தெரியுமா? வெறும் 3 நாள் மட்டும் தானா?
சென்னை: தை மாதத்தில் முகூர்த்த நாட்கள் எத்தனை இருக்கின்றன, எந்தெந்த நாட்களில் சுப காரியங்களை செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அந்த வகையில் தை மாதத்தில் பலர் நல்ல காரியங்களை செய்வதுண்டு. அதாவது திருமணம், நிச்சயதார்த்தம், பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்டவை நடத்தப்படும்.

அது போல் சிலர் சீமந்தம், வளைகாப்பு தை மாதத்தில் நடத்தும் நேரம் வந்துவிட்டால் நல்ல நேரம் பார்த்து நடத்துவதுண்டு.
கடந்த மாதம் மார்கழி என்பதால் அந்த மாதம் முழுக்க இறைவனை வழிபடுவதிலேயே போய்விட்டது. தற்போது தை பிறந்துவிட்டதால் மக்கள் காலண்டரை தேடி நல்ல நாளை பார்க்கிறார்கள்.
அந்த வகையில் தை மாதத்தில் முகூர்த்த நாள் எப்போது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
- ஜனவரி 28 ஆம் தேதி புதன்கிழமை வளர்பிறை முகூர்த்த நாள்
- பிப்ரவரி 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேய்பிறை முகூர்த்த நாள்
- பிப்ரவரி 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை முகூர்த்த நாள்
எனவே தை மாதத்தில் வளர்பிறையில் ஒரு முகூர்த்த நாளும் தேய்பிறையில் இரு முகூர்த்த நாட்களும் இருக்கின்றன. இதை விட்டால் அடுத்து மாசி மாதத்தில்தான் முகூர்த்த நாட்கள் உள்ளன.
ஜனவரி மாதம் 28 பஞ்சாங்கம்
- விசுவாசுவ ஆண்டு, தை 14, புதன்கிழமை
- திதி: மாலை 4.36 மணி வரை தசமி பின்னர் ஏகாதசி
- நட்சத்திரம்: கார்த்திகை காலை 9.26 மணி வரை, பிறகு ரோகிணி
- பிறை: வளர்பிறை
பிப்ரவரி 6ஆம் தேதி பஞ்சாங்கம்
- விசுவாசுவ ஆண்டு, தை 23 வெள்ளிக்கிழமை
- திதி: நள்ளிரவு 1.18 மணி வரை பஞ்சமி பின்னர் சஷ்டி
- நட்சத்திரம்: அஸ்தம் நள்ளிரவு 12.23 மணி வரை, பிறகு சித்திரை
- பிறை: தேய்பிறை
பிப்ரவரி 8ஆம் தேதி பஞ்சாங்கம்
- விசுவாசுவ ஆண்டு, தை 25 ஞாயிற்றுக்கிழமை
- திதி: காலை 5.01 மணி வரை சப்தமி பின்னர் அஷ்டமி
- நட்சத்திரம்: சுவாதி காலை 5.02 மணி வரை, பிறகு விசாகம்
- பிறை: தேய்பிறை
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications