திருப்பதியில் "இந்த" தேதியில் விஐபி தரிசனம் ரத்து- தேவஸ்தானம் தகவல்
திருப்பதி: ஜனவரி மாதத்தில் நடக்கும் பல்வேறு பண்டிகைகள், ஆன்மீக நிகழ்ச்சிகளை முன்னிட்டு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களும் இந்த அறிவிப்பை மனதில் கொண்டு தேவஸ்தான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (டிசம்பர்), ஜனவரி மாதத்தில் நடக்கும் பல்வேறு பண்டிகைகள், ஆன்மிக நிகழ்ச்சிகளை முன்னிட்டு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 23-ஆம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 29-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி, 30-ஆம் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 8-ஆம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசனம், ஜனவரி 25 ஆம் தேதி ரத சப்தமி விழாக்கள் நடக்கின்றன.

மேற்கூறிய தினங்களுக்கு முன்தினங்களில், நெறிமுறையின் அடிப்படையில் மட்டுமே அதிகாரப்பூர்வ வி.ஐ.பி.க்களுக்கு சாமி தரிசன அனுமதி வழங்கப்படும். மற்ற யாருக்கும் விஐபி பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது.
விஐபி தரிசனமும் ரத்து செய்யப்படும். அனைத்து பக்தர்களும் இந்த அறிவிப்பை மனதில் கொண்டு தேவஸ்தான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications